உக்கிரமான கொரோனா 2ஆவது அலை.. 9 நாட்களில் இறப்பு எண்ணிக்கை முழு ஏப்ரலை விட 50 சதவீதம் அதிகம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 9 நாட்களில் கொரோனாவால் 20,657 பேர் பலியாகிவிட்டார்கள். இது ஏப்ரல் மாதம் 1 முதல் 28 ஆம் தேதி வரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 3.60 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால் இந்தியாவில் மொத்தமாக 1,79,97,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் முதல் முறையாக இந்தியாவில் 3,293 பேர் பலியாகிவிட்டனர். இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது.
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்தியாிவல் கடந்த 1ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 38,260 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். ஆனால் கடந்த ஏப்ரல் 20 முதல் 28-ஆம் தேதி வரை 20,657 பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த ஏப்ரல் முழுவதும் வெளியான பலியானோரின் எண்ணிக்கையை காட்டிலும் 50 சதவீதத்திற்கு மேல் கடந்த 9 நாட்களில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை உள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 13 வரை ஒரு நாளைக்கு 1000-த்தை விட குறைவான எண்ணிக்கையிலேயே இறந்தனர்.
ஏப்ரல் 14 முதல் 17 வரை ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை என்பது 1500-ஐ விட குறைவாகவே இருந்தது. ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரு நாளைக்கு இறப்போரின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது. அதன் பின்னர் 21 ஆம் தேதி ஒரு நாளைக்கு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் இன்றைய தினம் ஒரு நாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications