இந்தியாவில் தொடர்ந்து கணிசமாக குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 38,667 பேருக்கு தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,667. நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 20,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரளாவில் மொத்தம் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,85,336. கேரளாவுக்கு அடுத்ததாக மகாராஷ்டிராவில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் 1893, கர்நாடகாவில் 1338, ஆந்திராவில் 1461 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒடிஷாவில் 1041, மேற்கு வங்கத்தில் 639, அஸ்ஸாமில் 929, மணிப்பூரில் 633, மேகலாயாவில் 411, மிசோரமில் 937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 493 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications