இந்தியாவில் ஏறுமுகம் காணும் தினசரி கொரோனா பாதிப்பு - 41,195 பேருக்கு புதிய தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,77,706 ஆக அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழே குறைந்த நிலையில் இன்று மேலும் 41ஆயிரம் பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு உலக நாடும் இதுவரை கொரோனாவில் இருந்து மீளவில்லை. இந்தியாவில் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக வீசியது.

India reports 41,195 new cases in the last 24 hours says Ministry of Health and Family Welfare.

முதல் அலையில் அமெரிக்காவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் இந்தியாவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41195 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,77,706 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,069 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 சதவிகிதம் ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,669 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,87,987 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதலில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்தாலும், 2வது அலையில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இப்போது மக்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 52 கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 52,36,71,019 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 44,19,627 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 48,73,70,196. நேற்றைய தினம் மொத்தம் 21,24,953 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+