91 நாட்களில் குறைவான பாதிப்பு.. 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா; 1,167 மரணங்கள்
டெல்லி: நாட்டில் கடந்த 91 நாட்களில் குறைவான பாதிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் மட்டும் 1,167 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 கோடியை எட்டியுள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 38 லட்சத்தை தாண்டியுள்ளது.

91 நாட்களில் குறைந்த பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 91 நாட்களில் மிக குறைவான பாதிப்பு ஆகும்.

24 மணி நேரத்தில் 1,167 பேர் மரணம்
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,89,302 ஆகும்.

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 81,839. மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,89,26,038. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,62,521.

28 கோடி பேருக்கு தடுப்பூசி
இன்று காலை நிலவரப்படி இதுவரை நாட்டில் மொத்தம் 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 80,95,314 தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications