இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடி பேரை கடந்தது - இன்று புதிதாக 51,667 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 கோடி பேரை கடந்துள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் ஒரேநாளில் 64,527 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றாலும் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடி பேரை கடந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3,01,34,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் பேர் கொரோனா தொற்றிலிருந்து 64,527 குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் ஒரேநாளில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,01,34,445 பேராக அதிகரித்துள்ளது. வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 3% ஆகவும் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஒரு லட்சத்துக்கும் கீழ் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக 50 ஆயிரமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 64,527 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 1,329 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,93,310 ஆக உயர்ந்துள்ளது. மரணமடைபவர்களின் விகிதமும் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைகளில் 6,12,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 6,12,868 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு
3,44,64,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவிலும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,01,34,445 பேரை கடந்துள்ளது.
இந்தியாவில் முதல் அலையில் கொரோனா தினசரி பாதிப்பு 70 ஆயிரத்தை கூட அதிகம் தாண்டியதில்லை. இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. இதன் காரணமாக விரைவில் 3 கோடி பேரை எட்டியுள்ளது. அமெரிக்காவில் இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வருகிறது.
அதே நேரத்தில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 1,82,43,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டில் 57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி நாட்டில் 53 லட்சம் பேரும், ரஷ்யாவில் 53 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் நாட்டில் 46 லட்சம் பேரும், அர்ஜென்டினாவில் 43 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 42 லட்சம் பேரும், கொலம்பியாவில் 40 லட்சம் பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications