டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் நேற்று 83,064 பேருக்கு கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 897 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 83,064 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 897 ஆகவும் பதிவாகி இருந்தது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,54,074 ஆக இருந்தது.

மேலும் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,305 ஆகும். உலகம் முழுவதும் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18,37,282.

டெல்டாவோ ஓமிக்ரானோ.. அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் இனி ஒரே தடுப்பூசி.. அசத்திய இந்திய விஞ்ஞானிகள்..!டெல்டாவோ ஓமிக்ரானோ.. அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் இனி ஒரே தடுப்பூசி.. அசத்திய இந்திய விஞ்ஞானிகள்..!

உலக நாடுகள்

உலக நாடுகள்

இதனையடுத்து உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,57,99,701 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 57,58,346 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 31,45,98,048 ஆகும்.

ரஷ்யாவில் அதிகம்

ரஷ்யாவில் அதிகம்

நாடுகளைப் பொறுத்தவரையில் ரஷ்யாவில்தான் அதிகபட்சமாக நேற்று கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,80,071 ஆகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 661 ஆகவும் இருந்தது. பிரான்சில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 1,55,439 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 129 ஆகவும் இருந்தது.

இந்தியாவில் அதிக மரணங்கள்

இந்தியாவில் அதிக மரணங்கள்

ஜெர்மனியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,424 ஆகவும் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆகவும் பதிவானது. ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,817; கொரோனா மரணங்கள் எண்ணிகை நேற்று 126. இந்தியாவில்தான் ஒருநாள் கொரோனா மரணங்கள் நேற்று அதிகமாக இருந்தது. இந்தியாவில் 83,064 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு பதிவானது. மேலும் 897 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இந்தியா சனிக்கிழமை நிலவரம்

இந்தியா சனிக்கிழமை நிலவரம்

இந்தியாவில் கடந்த சனிக்கிழமையன்று 1,07,474 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,25,011; கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 2.90%ஆக இருந்தனர். மேலும் நேற்று காலை வரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா 169.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருந்தன. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 74.01 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
India has reportes 83,064 new Covid19 cases and 897 deaths on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X