காலநிலை மாற்றத்திற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பு! இந்தியாவை நினைத்தா பெருமையாக உள்ளது! பிரதமர் மோடி
டெல்லி: பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு புறக்கணிக்கத்தக்க அளவில் இருந்தாலும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என பெருமையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் துகள்கள் அதிகளவில் வெளியேற்றுவதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பு என குற்றம்சாட்டினார்.
கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு. இவர் ‛மண்காப்போம்' இயக்கத்தையும் நடத்தி வருகிறார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயக்கத்தின சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும் மண்ணை பாதுகாப்பது தொடர்பாக மோட்டார் சைக்கள் ஊர்வலமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லி விஞ்ஞான் பவனில் ‛மண்காப்போம்' இயக்கம் சார்பில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி
இந்தியாவின் பல அரசு திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் தூய்மை இந்தியா, நமாமி கங்கை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து பல முயற்சிகள் செய்து வருகிறது.

வளர்ந்த நாடுகளே பொறுப்பு
இந்தியா சுற்றுச்சூழலுக்கு சாதகமான எரிபொருள் பயன்பாட்டில் ஆர்வம் காட்டி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்புக்கான இலக்கை 5 மாதத்துக்கு முன்பே இந்தியா எட்டிவிட்டது. இது இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்படும். மேலும் அதிக கார்பன்(கரியமிலவாயு) வெளியேற்றத்துக்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பாகும்.

புறக்கணிக்கத்தக்க அளவில்...
உலகளாவிய பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு என்பது மிகமிக குறைவு அதாவது புறக்கணிக்கத்தக்க அளவில் இருந்தாலும் கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் திட்டங்களானது பல்லுயிர் அதிகரிப்பு மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் உள்ளது. இதன்மூலம் காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

மண்வள அட்டை
இதற்கு முன்பு நம் விவசாயிகளுக்கு மண்ணில் உள்ள சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டை வழங்கும் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட கங்கை கரையில் இயற்றை விவசாயத்தை அறிமுகம் செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது'' எனக்கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications