இந்தியாவில் கொரோனா மரணங்களில் குஜராத் 2-வது இடம்- நாடு முழுவதும் பாதிப்பு 1,06,468 ஆக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,468 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

covid19india.org புள்ளிவிவரங்களின் அடிப்பையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,06,468. இதில் 42,307 பேர் குணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,301.

ஒரே நாளில் 2078 பேருக்கு பாதிப்பு

ஒரே நாளில் 2078 பேருக்கு பாதிப்பு

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் இருக்கிறது. ஒரே நாளில் 2078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு கொரோனா மரணங்க்ள் 1325 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகம் 2-வது இடம்

தமிழகம் 2-வது இடம்

இதனையடுத்து 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 668 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 12,448 பேருக்கு கொரோனா தொற்று என எண்ணிக்கை உயர்ந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா மரணங்கள் குறைவுதான். இதுவரை மொத்தம் 84 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ளது குஜராத். ஆனால் கொரோனா மரணங்களில் குஜராத் 2-வது இடத்தில் இருக்கிறது. குஜராத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 719. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,141 ஆகும். செவ்வாய்க்கிழமையன்று மட்டும் குஜராத்தில் 395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

வட இந்திய மாநிலங்கள்

வட இந்திய மாநிலங்கள்

டெல்லியில் 506 பேருக்கு புதியதாக கொரோனா உறுதியானது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,554 ஆனது. ராஜஸ்தானில் 5,845; ம.பி.யில் 5,465; உ.பி.யில் 4,926 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோராவர். மேற்கு வங்கத்தில் கொரோனா மரணங்கள் 250 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+