இந்தியாவில் 49 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு- 80 ஆயிரத்தை தாண்டிய மரணங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 83,809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 1,054 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலேயே இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 83,809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு 49 லட்சத்தை தாண்டியது

பாதிப்பு 49 லட்சத்தை தாண்டியது

இதனால் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 49 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவின் மொத்த பாதிப்பு 49,30,237. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,054 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80,776 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்

இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,59,400 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலையில் நமது நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் மொத்தம் 9,90,061 ஆகும்.

முதல் 5 மாநிலங்கள்

முதல் 5 மாநிலங்கள்

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற- ஆக்டிவ் கேஸ்களில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் உ.பி.யில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம்.

மாநிலங்களின் உயிரிழப்புகள்

மாநிலங்களின் உயிரிழப்புகள்

கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் மட்டும் 29,894 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 8,434 பேரும் கர்நாடகாவில் 7,384 பேரும் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா, டெல்லி, உ.பி.. மேற்கு வங்கத்தில் 4,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+