டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடு முழுவதும் கொரோனாவிற்கு 47.50 லட்சம் பேர் பாதிப்பு - 37 லட்சம் பேர் மீண்டனர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 47.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 94372 பேர் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,357 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து 37,02,596 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பலகட்டங்களாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டன. இப்போது லாக்டவுன் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரிசோதனை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

Indias COVID19 case tally crosses 47 lakh mark with a spike of 94,372

நாடு முழுவதும் இதுவரை 5.62 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10.71 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் 94,372 பேருக்கு புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 47,54,357 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - மருத்துவமனையில் சிகிச்சை 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 1114 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78586 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 37,02,596 பேர் மீண்டுள்ளனர். 9,73,175 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
India's COVID19 case tally crosses 47 lakh mark with a spike of 94,372 new cases and 1,114 deaths reported in the last 24 hours. The total case tally stands at 47,54,357 including 9,73,175 active cases, 37,02,596 cured 78,586 deaths says Ministry of Health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X