Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா அசத்துதே! ரஷ்யாவுக்கு அடுத்து.. பிரமாண்ட ஆயுதத்தை சொந்தமாக்கும் ராணுவம்! உஷாரான பாக்.,

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாறிவரும் உலக சூழலில்.. போர்கள் நவீனமடைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத நாடுகள் பின் தங்கிவிடும். எனவே இந்தியா, தொடர்ந்து நவீன ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 'ஸ்க்ராம்ஜெட்' எனப்படும் மிக முக்கியமான ஆயுத சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்திருக்கிறது.

ஸ்க்ராம்ஜெட் ஏவுகணையை இன்றைய தேதியில் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தி வருகிறது. எனவே ரஷ்யாவுக்கு அடுத்து இந்த ஏவுகணையை வெற்றிகரமாக பயன்படுத்தும் நாடாக இந்தியா மாறும். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கும்.

India DRDO Pakistan

ஸ்க்ராம்ஜெட் என்றால் என்ன?

சாதாரண ஏவுகணைகள் ராக்கெட் மூலம் பறக்க வைக்கப்பட்டு, இலக்கை தாக்கும். ஆனால், இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ராக்கெட்களில் உள்ள எரிபொருள் எரிய, ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜன் இல்லை எனில் நெருப்பு எரியாது. ஆகையால்.. ஒவ்வொரு ஏவுகணை ராக்கெட்டிலும் தனியாக ஆக்சிஜன் டேங்க் இருக்கும். இந்த டேங்க் ஏவுகணையின் எடையில் பாதியை எடுத்துக்கொள்ளும். இதனால், இவ்வளவு எடையை வைத்து அதிக வேகமாகவும், நீண்ட தூரத்திற்கும் செல்ல முடியாது.

மேம்பட்ட தொழில்நுட்பம்

இந்த சிக்கலை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்டதுதான், ஸ்க்ராம்ஜெட். இது ஒருவகையான ராக்கெட் என்ஜின். அதாவது இந்த ராக்கெட் பறக்கும்போது, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை பயன்படுத்தி, அதை வைத்து எரிபொருளை எரிக்கும். இதனால் ஆக்சிஜன் டேங்கை சுமந்துக்கொண்டே செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி செய்வதால் வெயிட்டும் குறையும். எடை குறைந்தால் வேகமும், தாக்குதல் தூரமும் அதிகரிக்கும். ஒலியை விட 5 முதல் 7 மடங்கு வேகத்தில் ஏவுகணைகளை ஸ்க்ராம்ஜெட் ராக்கெட்டால் ஏவ முடியும்.

தரையிலிருந்து 20-30 கி.மீ உயரத்தில், ஒலியை விட 5-7 மடங்கு வேகத்தில்.. அதாவது மணிக்கு 6,174 கி.மீ வேகத்தில் ஏவுகணை பயணிக்கிறது எனில், அதை ரேடாரில் கண்டுபிடிப்பது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம். எனவேதான் ஸ்க்ராம்ஜெட் முக்கியமாக இருக்கிறது.

தடுக்கவே முடியாது

இப்பேர்ப்பட்ட ஸ்க்ராம்ஜெட் ராக்கெட், ரஷ்யாவிடம் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் அணு ஆயுதங்களை சுமந்து செல்ல இதனை ரஷ்யா பயன்படுத்துகிறது. அமெரிக்கா, அணு ஆயுதங்கள் இல்லாத ஏவுகணைகளுக்காக ஸ்க்ராம்ஜெட் ராக்கெட்டை உருவாக்க முயன்று வருகிறது. ஆனால், தொடர் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. சீனா ஸ்க்ராம்ஜெட்டை வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

சோதனை வெற்றி

இந்த லிஸ்டில் தற்போது இந்தியாவும் இடம்பிடித்திருக்கிறது. அதாவது இந்தியாவின் DRDO, கடந்த ஜன.9ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள DRDL ஆய்வகத்தில் ஸ்க்ராம்ஜெட் ராக்கெட்டை வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்த்திருக்கிறது. ஆக்டிவ்லி கூல்டு ஸ்க்ராம்ஜெட் என்ஜினை தொடர்ந்து 12 நிமிடங்களுக்கு தரையில் இயக்கி சோதனை செய்து பார்த்திருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோல சோதனை செய்யப்பட்டது. ஆனால், அப்போது செய்யப்பட்ட சோதனையை விட இது மிக நீண்ட கால அளவாகும்.

பாகிஸ்தானுக்கு பயம்

சோதனை வெற்றியடைந்துள்ளதால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா சொந்தமாக ஸ்க்ராம்ஜெட் என்ஜினை பயன்படுத்தும் நிலையை அடையும். இது பாகிஸ்தானுக்கு கெட்ட செய்தி. இந்த ஸ்க்ராம்ஜெட் என்ஜின் எதிர்காலத்தில் பிரம்மோஸ்-2 ஏவுகணையில் பயன்படுத்தப்படும். இவற்றை கொண்டு, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தானின் ராணுவ தலைமையகத்தை வெறும் 2-3 நிமிடங்களில் நம்மால் தாக்க முடியும்.

நொடிப்பொழுதில் தாக்குதல்

தவிர, அந்நாட்டின் மிக முக்கியமான விமானப்படை தளங்களான சர்கோதா, முஷப் மற்றும் கம்ரா ஆகியவற்றை நொடிப்பொழுதில் நம்மால் செயலிழக்க வைக்க முடியும். பாகிஸ்தானால் இதை தடுக்க முடியாது. ஏனெனில் அந்நாடு, சீனாவிடமிருந்து வாங்கிய HQ-9 வான் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. இதை வைத்து, நம்முடைய தாக்குதலை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+