முதல் இடத்தில் மோடி, 2வது இடத்தில் தோனி.. இந்திய மக்களின் மனம் கவர்ந்தவர்கள் பட்டியல் இதோ!
Recommended Video
டெல்லி: இந்திய அளவில் மக்கள் மனம் கவர்ந்த பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தையும் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் தோனியும் இடம் பிடித்துள்ளனர்.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடி யார் என்று கேட்டால் அவர் குஜராத் முதல்வர் என்ற அளவில் தான் இருந்தது. அதே 2014 ம் ஆண்டில் குஜராத்தின் வளர்ச்சி நாயகன் மோடி என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்றநிலைக்கு மோடி உயர்ந்தார்.
குஜராத்தை போல், மொத்த இந்தியாவையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் என்று நம்பிய மக்கள் அதிக மெஜாரிட்டியுடன் (305 இடங்கள்) மோடியை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினர்.

மக்களின் மனம் கவர்ந்தவர்
இந்நிலையில் 2019ம் ஆண்டு மீண்டும் தேர்தல் வந்த போதும், பிரதமர் மோடி தான் வலிமையான தலைவர் அவரே பிரதமராக வர வேண்டும் என்று நினைத்து இந்தியா முழுவதும் வாக்களித்தனர். இதன் காரணமாக மீண்டும் மோடி தலைமையிலான பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது.பிரதமர் மோடி அண்மையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் இந்தியா முழுவதும் போற்றப்படுகிறார். இதேபோல் பல்வேறு விவகாரங்களில் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதை கவர்ந்துள்ளார்.

மக்களின் மனம் கவர்ந்தவர்
இந்நிலையில் இங்கிலாந்தின் `யூகோவ்' (YouGov) என்ற நிறுவனம் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்து சர்வே ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. . உலக அளவில் 42,000-த்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த சர்வேயில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். பெண்கள் வரிசையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார.

தோனி 2ம் இடம்
இந்திய அளவில் மக்கள் மனம் கவர்ந்த பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடி முதல் இடத்தையும் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இடம் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தை தொழிலதிபர் ரத்தன் டாட்டா பிடித்துள்ளார். 4வது இடத்தை ஒபாமாவும், 5வது இடத்தை பில்கேட்ஸ், 6வது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தை வீராட் கோலியும், 8வது இடத்தை ஷாருக்கான், 9வது இடத்தை ஜாக்கிஜான், 10வது இடத்தை தலாய் லாமா ஆகியோர் பிடித்துள்ளனர்.

மோடிக்கு அடுத்த இடம்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர் என்றால் அது தோனி தான். ஆபத்தான நேரத்தில் சரியாக விளையாடி தோனி பலமுறை இந்திய கிரிக்கெட் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். தோனி களத்தில் இருந்தால் நிச்சயம் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை அவர் விதைத்தார். ராக்கெட் சிக்சர்களும், சாதூர்யமான ஆட்ட திறனும் தோனியை பலருக்கும் பிடிக்க காரணமாக அமைந்தது . கடைசி 15 வருடங்களில் ஒட்டுமொத்த இந்தியாவுமே தூக்கிவைத்து கொண்டாடிய ஒரு விளையாட்டு வீரர் என்றால் அது தோனி தான். அதனால் தான் என்னவோ இந்திய மக்களின் மனம் கவர்ந்தவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்த இடமான நிலையில் இரண்டாவது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனி பிடித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications