4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு- மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் 4-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்புகளைவிட கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மூன்றாவது கட்டம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 26,02,435 முகாம்களில் 18,04,57,579 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில், 96,27,650 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 66,22,040 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 1,43,65,871 முன்கள பணியாளர்கள் (முதல் முறை), 81,49,613 முன்கள பணியாளர்கள் (இரண்டாம் முறை), 18-45 வயது வரையில் 42,58,756 பேர் (முதல் முறை), 45-60 வயதில் 5,68,05,772 நபர்கள் (முதல் முறை) மற்றும் 87,56,313 நபர்கள் (இரண்டாவது முறை), 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 5,43,17,646 பேர் (முதல் முறை) மற்றும் 1,75,53,918 பயனாளிகள் (இரண்டாவது முறை) ஆகியோர் அடங்குவர்.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளில் 66.73%, 10 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. 18-44 வயதிற்குட்பட்ட பிரிவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,28,216 பயனாளிகளும், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 42,58,756 பயனாளிகளும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் 28,241 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 11 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

குணமடைதல் 83.83% ஆக உயர்வு
கொவிட் தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,04,32,898 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 83.83 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,53,299 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் நான்காவது முறையாக அன்றாட புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
புதிதாக குணமடைந்தவர்களில் 70.49 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 36,73,802 ஆக இன்று சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 15.07% ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 31,091 குறைந்துள்ளது. தற்போதைய பாதிப்புகளில் 77.26%, 11 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

எவ்வளவு விநியோகம்?
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவளிக்கிறது. இந்த வகையில் சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 10,796 பிராணவாயு செறிவூட்டிகள், 12,269 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 6,497 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 4.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது.

10 மாநிலங்களில் புதிய பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 74.85%, 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,779 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 39,923 பேரும், கேரளாவில் 34,694 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தேசிய உயிரிழப்பு வீதம், இந்தியாவில் தற்போது 1.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,890 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா உயிரிழப்பு
உயிரிழந்தவர்களில் 72.19 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 695 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 373 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications