இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 1,14,460 பேருக்கு தொற்று உறுதி; 2,677 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறய தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,14,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையன்று மொத்தம் 2,677 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,37,02,769 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 37,35,744 ஆகும். உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 15,65,66,963 ஆகவும் உள்ளது.
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது.

1,14,460 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,14,460 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் சனிக்கிழமையன்று 2,677 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேலும் நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,89,232. இந்தியாவின் தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 14,77,799.

பிரேசில், அர்ஜென்டினா
இந்தியாவை தொடர்ந்து பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 65,471 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,661 ஆகவும் இருந்தது. 3-வது இடத்தில் அர்ஜென்டினாவின் பாதிப்பு உள்ளது. அர்ஜென்டினாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,627; கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 456 ஆக இருந்தது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,790 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 380 ஆகவும் இருந்தது.

ரஷ்யாவில் திடீர் அதிகரிப்பு
ரஷ்யாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ரஷ்யாவில் நேற்று ஒருநாளில் 9,145 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் 399 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் அதிக பாதிப்பு
இந்தியாவில் மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சனிக்கிழமையன்று 21,410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 443 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

மகா., கர்நாடகா
மகாராஷ்டிராவில் சனிக்கிழமையன்று 13,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் கொரோனாவுக்கு 741 பேர் பலியாகி இருந்தனர். கர்நாடகாவில் ஒரே நாளில் 13,800 பேருக்கு கொரோனா உறுதியானது. இம்மாநிலத்தில் நேற்று கொரோனாவுக்கு 365 பேர் உயிரிழந்தனர்.

கேரளா பாதிப்பு
கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,328 ஆகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 209 ஆகவும் இருந்தது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications