டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 83% கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 84,877 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஒடிஷா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில்தான் 73% கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

கோவையில் அதிகரித்த கொரோனா.. தனிமைப்படுத்தல் விதிமுறையில் அதிரடி மாற்றம்கோவையில் அதிகரித்த கொரோனா.. தனிமைப்படுத்தல் விதிமுறையில் அதிரடி மாற்றம்

India’s Recovery Rate leaps past 83%

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 20,000 பேர் அளவுக்கு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கர்நாடகா, ஆந்திராவில் தலா 7000-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரேநாளில் மீண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விவரம்: மகாராஷ்டிரா 19, 932; கர்நாடகா- 7,509; ஆந்திரா- 7,210; தமிழகம்- 5,554; உ.பி- 5,382; டெல்லி- 4,052; ஒடிஷா - 4,014; கேரளா-3,347; மேற்கு வங்கம் 2,923; ம.பி- 2,441.

India’s Recovery Rate leaps past 83%

இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 9,47,576. இதனைவிட கூடுதலாக 41.5 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதாவது ஆக்டிவ் கேஸ்களை விட 5.38 மடங்கு அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,589. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 51,01,397. இந்த புதிய கொரோனா நோயாளிகளில் 73% பேர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 11,000-க்கும் அதிகமானோருக்கும் கர்நாடகாவில் 6,000க்கு அதிகமானோருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதியானது.

India’s Recovery Rate leaps past 83%

கடந்த 24 மணிநேரங்களில் 776 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளன்ர். இதில் 78% 10 மாநிலங்களை சேர்ந்ததாகும். மகாராஷ்டிராவில்180 பேரும் தமிழகத்தில் 70 பேரும் கொரோனாவால் ஒரேநாளில் உயிரிழந்தனர்.

India’s Recovery Rate leaps past 83%
English summary
India continues to report high number of recoveries. The recovered cases have exceeded the new confirmed again during the past 24 hours. With this, India’s Recovery Rate has leaped past 83% today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X