இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பில் உலக சாதனை படைத்த இந்தியா.. பகீர்!
டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 79,000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது., இது இதுவரை எந்த நாட்டிலும் பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த பாதிப்பு ஆகும்.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 7 நாட்களில் உயர்ந்துள்ளது
நேற்று ஒரே நாளில் 78,903 பேருக்கு புதிதாக, இந்தியாவில் கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25ம் தேதி அமெரிக்காவில் ஒரே நாளில் 78,427 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதே அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாக இருந்தது. ஆனால் அதைவிடவும் இப்போது மிகமிக உச்சபட்சமாக 79,000 பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

5 லட்சம் பாதிப்பு
கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா, மற்றும் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில். கடந்த ஒரு வாரமாக தொற்று மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் 4,96,070 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 30 லட்சத்தில் இருந்த பாதிப்பு ஒரே வாரத்தில் 35 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியா புதிய உச்சம்
ஒரு நாளைக்கு சராசரியாக 70,867 தொற்று பதிவாகி வருகிறது. இது உலகின் ஏழு நாள் காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கையிலேயே மிக உயர்ந்தபட்ச எண்ணிக்கையாகும், இது ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவின் மோசமான நிலை ஏற்பட்டதை விட அதிகம் ஆகும்.

தமிழகம் 4வது இடம்
மகாராஷ்டிராவில் நாட்டிலேயே உச்சபட்சமாக 16,867 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்ப்பட்டது. ஆந்திராவில் 10,548 பேருக்கும், கர்நாடகாவில் 8,324 தமிழ்நாட்டில் 6,352 பேருக்கும் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை நாட்டில் உயர்ந்து வருவதால் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 49,000 அதிகரித்து 7,66,226 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி 64,681 பேர் நாட்டில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 27,06,861 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு பலி
கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 945 பேர் பலியாகி உள்ளனர். ஐந்து நாட்களில் முதல் முறையாக பலி எண்ணிக்கை 1,000 க்கும் கீழ் குறைந்தது இன்று காலை நிலவரப்படி 63,690பேர் நாடு முழுவதும் கொரோனாவால் இதுவரை பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24103 பேரும், தமிழகத்தில் 7137 பேரும் , கர்நாடகாவில் 5483 பேரும், டெல்லியில் 4404 பேரும் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications