பிசிறு தட்டாமல் அடிக்கும் ஏவுகணை.. 2000 கி.மீ ரேஞ்ச்! இந்திய ராணுவம் புதிய சாதனை!
டெல்லி: இந்திய ராணுவம் அக்னி-பிரைம் ஏவுகணையை ரயிலிருந்து ஏவி சோதனை செய்திருக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது தாக்கி அழிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதல் முறையாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலிலிருந்து நேற்று ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

இந்த ரயில் ஏவுதள அமைப்பை, முன் தயாரிப்புகள் ஏதுமின்றி, நாட்டின் ரயில்வே நெட்வொர்க் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். இது ராணுவ படைகளுக்குக் குறைந்த நேரத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனை வழங்குகிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத்சிங் பதிவிட்டிருப்பதாவது, "இடைநிலைத் தூரம் தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த DRDO, வியூகப் படைகள் கட்டளை மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனை மூலம் ரயிலிலிருந்து ஏவுகணையை ஏவும் கேனிஸ்டரைஸ் செய்யப்பட்ட ஏவுதல் அமைப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்னி-பிரைம் ஏவுகணை
இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அக்னி-பிரைம் ஏவுகணை முக்கியமானது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றன. அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் இருக்கின்றன. இதில் சில வகை ஏவுகணைகள், 3,500 முதல் 5,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சமே, எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று, அங்கிருந்து ஏவ முடியும் என்பதுதான்.
#WATCH | Raksha Mantri Rajnath Singh tweets, "India has carried out the successful launch of Intermediate Range Agni-Prime Missile from a Rail-based Mobile launcher system. This next-generation missile is designed to cover a range of up to 2000 km and is equipped with various… pic.twitter.com/kfDOjVpAeW
— ANI (@ANI) September 25, 2025
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இந்திய கால சூழலுக்கு ஏற்றார்போல சிறப்பாக தன்னை வடிவமைத்துக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும். இதன் தாக்குதல் தன்மை மிகவும் துல்லியமானது. அதேபோல இதில் அணு குண்டுகளையும் பயன்படுத்த முடியும். சமீப காலமாக பாகிஸ்தானுடன் உரசல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த ஏவுகணை சோதனை ராணுவத்திற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications