"அணு ஆயுதங்களை" சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை.. எதிரியை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
டெல்லி: ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அதிமுக்கிய சோதனை ஒன்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் வலுவான ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் இருக்கிறது. சீனாவுக்கு அடுத்து அதிகப்படியான வீரர்களைக் கொண்ட ராணுவமாக இந்திய ராணுவம் இருந்து வருகிறது.
அதேநேரம் இந்திய ராணுவத்தில் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு அப்டேட் ஆகவில்லை குற்றச்சாட்டு கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இந்தக் குற்றச்சாட்டைப் போக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக நவீன ராக்கெட் சோதனைகளைப் பாதுகாப்புத் துறை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் சோதனை வெற்றிகரமாக இருந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வழக்கமான ராக்கெட் சோதனை நிகழ்வின் போது இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ராக்கெட் லான்ச் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ராக்கெட்டின் அனைத்து செயல்பாடுகளும் சரியாகவே இருந்து உள்ளது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
அதிநவீன வசதிகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அக்னி-3 ஏவுகணை எதிரியை இடைமறித்துத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும்.
அக்னி ஏவுகணைகள் இந்தியாவில் அணு ஆயுதங்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்ட முக்கிய ராக்கெட்களாக பார்க்கப்படுகிறது. இதில் பிரித்வி குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அடங்கும்.
அதேபோல நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பலில் இருந்து ராக்கெட் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications