அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் வெடித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று ஓமன் கடல் பகுதியில், வணிக கப்பல் மீது அமெரிக்க நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் மாயமாகியிருக்கின்றனர். இதனால், இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஓமன் கடல் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த 3 நாட்களில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல்கள் மீது நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.

India Summons US

சம்பவத்தின் பின்னணி

ஓமன் கடற்கரைக்கு அருகே 'செட்டபெல்லோ' என்ற வணிகக் கப்பல் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் மொத்தம் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக, கடந்த ஜூன் 8-ம் தேதி 'எம்.டி. மாரிவெக்ஸ்' (M/T Marivex) என்ற மற்றொரு கப்பல் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அதைச் செயலிழக்கச் செய்தன. அந்தக் கப்பலிலும் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர்.

இந்தியாவின் கடும் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிகக் கப்பல்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. மோதல்களின் நேரடி விளைவாகவே இது பார்க்கப்படுகிறது. சர்வதேச கடல் வழிப்பாதையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்திய மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களை ஏற்க முடியாது என்று அமெரிக்கத் தூதரிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் விளக்கம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறிச் செயல்பட்டதாலும், அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாததாலும் அந்தக் கப்பல்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

தற்போது ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து காணாமல் போன மாலுமிகளைத் தேடும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+