டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கைக்கு உதவ களம் இறங்குகிறது இந்தியா.. தேசிய பாதுகாப்பு குழு விரைகிறது

இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு குழுவை அனுப்பி உதவ இந்தியா முடிவெடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு தேசிய பாதுகாப்புக் குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இலங்கை மிகப் பெரும் அபாயகரமான சூழலில் சிக்கியுள்ளது. அங்கு ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதால் தேடுதல் வேட்டையும் தீவிரமாகியுள்ளது.

விரைவில் நாடு முழுவதும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு விரைவில் நாடு முழுவதும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியா உதவி

இந்தியா உதவி

இந்த நிலையில் இலங்கைக்கு உதவ பல்வேறு நாடுகளும் களம் இறங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியாவும் தனது உதவியைக் கொடுக்கவுள்ளது. அதன்படி தேசிய பாதுகாப்புக் குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடுப்பு பிரிவினர்

தடுப்பு பிரிவினர்

இந்தக் குழுவில் வெடிகுண்டு நிபுணர்கள், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் இலங்கை படையினருக்கு உதவி செய்வார்கள்.

தயார் நிலை

தயார் நிலை

இந்த படையினர் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும். உத்தரவு கிடைத்ததும் அவர்கள் இலங்கை செல்வார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அசாதாரண சூழல்

அசாதாரண சூழல்

கடந்த 80களில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படை சென்றது. பெரும் சேதத்தையும் அங்கு சந்தித்தது. அதன் பிறகு இந்தியப் படையினர் யாரும் இலங்கைக்கு போனதில்லை. இந்த நிலையில் தற்போது இலங்கையில் அசாதாரண சூழல் எழுந்துள்ள நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் குழு இலங்கை செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
India has decided to send a National Security team to Sri Lanka. The group included bomb guards and radical detectives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X