இந்தியாவிடம் மீண்டும் கச்சத்தீவு? இலங்கை ரகசிய ஒப்பந்தம்? தமிழ் எம்பி விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல்!
டெல்லி: கச்சத்தீவில் இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து இலங்கை அரசு ஒப்பந்தம் செய்திருக்கக் கூடும் என தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எம்பியுமான சிவி விக்னேஸ்வரன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிடம் 'நிர்வாக' ரீதியாக ஒப்படைக்கப்பட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்கிற தகவலை சிவி விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமான நிலப்பரப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியாக மீன்பிடிக்கும் பகுதி இது. ஆனால் 1974-ம் ஆண்டு மத்திய அரசு தமிழ்நாட்டை கலந்து ஆலோசிக்காமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. இதற்கு தமிழ்நாட்டில் அப்போதே ஆட்சியில் இருந்த திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து கச்சத்தீவு அருகே தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்கிற உரிமைகள் இணைக்கப்பட்டு 1976-ம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் உருவானது. ஆனால் இதனை இலங்கை அரசு இன்று வரை பொருட்படுத்தவே இல்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 850-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது. இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது இலங்கை.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீண்டும் பெறுவதுதான் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. பிரதமர் மோடி தலைமையிலான கடந்த ஆட்சியிலேயே கச்சத்தீவு தொடர்பான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இலங்கை வவுனியாவில் நேற்று சிவி விக்னேஸ்வரன் எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கச்சத்தீவில் இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசு அனுமதித்திருக்கிறது. இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதா என்பது தெரியாது என பூடகமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications