India Today:லோக்சபா தேர்தல் இப்ப நடந்தாலும்.. உ.பி.யில் இந்தியா கூட்டணியை அசைக்க முடியாது-பாஜக ஷாக்!
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவால் கூடுதலாக சில தொகுதிகளை மட்டுமே பெற முடியும்; அம்மாநிலத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என India Today- C Voter கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Today- C Voter இணைந்து லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய அளவிலும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. இதில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024-ம் ஆண்டு தேர்தலை விட கூடுதலான இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் அனைத்து தொகுதிகளையும் வெல்லும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

India Today- C Voter-ன் உத்தரப்பிரதேச மாநில கருத்து கணிப்பு.
தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக 43 முதல் 45 இடங்களைக் கைப்பற்றும்.
லோக்சபா தேர்தல் தற்போது நடத்தப்பட்டால் உ.பி.யில் இந்தியா கூட்டணிக்கு 34 முதல் 36 இடங்கள் கிடைக்கும்.
தற்போது தேர்தல் நடந்தால் உ.பி.யில் பாஜகவின் வாக்கு சதவீதம் 4% அதிகரிக்கும். அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 48% வாக்குகள் கிடைக்கும்.
உ.பி.யில் தற்போது தேர்தல் நடந்தால் இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் 2% குறையும். இந்தியா கூட்டணிக்கு 42% வாக்குகள் கிடைக்கும்.
2024-ம் ஆண்டு தேர்தலில் உ.பி.யில் இந்தியா கூட்டணி 43 இடங்களையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 36 இடங்களையும் பெற்றிருந்தன.

உ.பி.யும் பாஜகவும்
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னர் வரை 80 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என பாஜக அதீதமாக நம்பியது. உ.பி. தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் யார் ஆட்சி அமையும் என்பதை தீர்மானிப்பதாகவே இருந்து வருகிறது. ஆனால் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவால் 36 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது; சமாஜ்வாதி- காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 43 இடங்களில் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. தற்போது தேர்தல் நடந்தாலும் கூட பாஜகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்ற போதும் இந்தியா கூட்டணி அசைக்க முடியாத கடும் போட்டி சக்தியாகவே இருக்கிறது என்கிற உண்மையை India Today- C Voter கருத்து கணிப்பு வெளிப்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications