நாடு முழுவதும் பாஜக வெல்லலாம்.. ஆனால் தமிழ்நாட்டில் கதையே வேறு.. இந்தியா டிவி வெளியிட்ட கணிப்பு
டெல்லி: தமிழ்நாட்டில் (மொத்தம் 39), திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணி 30 லோக்சபா தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி ஒன்பது இடங்களில் மட்டுமே வெல்லும் வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது.
இந்தியா டிவி -சிஎன்எஸ் இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தியா முழுவதும் 23,871 ஆண்கள் மற்றும் 20,677 பெண்கள் என மொத்தம் 44,548 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவுகளை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது.

இந்த கணிப்புகளின் படி லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எதிர்கட்சி கூட்டணியான இந்தியாவை விட அதிக இடங்களில் முன்னணியில் இருக்கும் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டது. மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கணிப்புகளை இந்தியா டிவி இன்று வெளியிட்டு வருகிறது.
இன்று வெளியிட்ட கணிப்பில் குஜராத் மாநிலத்தில் 26 இடங்களிலும் பாஜகவே வெல்லும் என்றும், கர்நாடகாவில் 20 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரை 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக 12 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டிவி -சிஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள தொகுதிகளுக்கான கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
நேற்று முதல் இன்று வரை வெளியிட்ட கணிப்புகளில் சில முக்கியமானவற்றை பார்ப்போம். டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 144 லோக்சபா தொகுதிகளை கைப்பற்று என்றும் இந்தியா கூட்டணி 85 இடங்களை வெல்லும் என்றும் பிற கட்சிகள் 36 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பில் இந்தியா டிவி கூறியுள்ளது,.
இதில் மாநில வாரியாக பார்த்தால் பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 21 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறலாம், மீதமுள்ள நான்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் (மொத்தம் 29 இடங்கள்), தேசிய 24 லோக்சபா தொகுதிகளிலும், மீதமுள்ள 5 இடங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குக் கிடைக்கலாம் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வந்த கணிப்புகளை வைத்து பார்க்கும் போது காங்கிரஸ் கூட்டணி கடந்த முறையைவிட இந்த முறை அதிக இடங்களில் வெல்லும் என்று தெரிகிறது. கணிப்புகளின் படி பாஜக கூட்டணிக்கு கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி பெரிய வெற்றி பெற வாய்ப்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரிய வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்று இந்தியா டிவி கணித்துள்ளது. அதேநேரம் 2019ல் தோற்றது போல் 39 க்கும் 38 என்கிற அளவிற்கு இருக்காது என்கிறது கணிப்பு.
தமிழ்நாட்டில் (மொத்தம் 39), திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணி 30 லோக்சபா தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி ஒன்பது இடங்களில் மட்டுமே வெல்லும் வாய்ப்பு உள்ளதாக இந்தியா டிவி கணித்துள்ளது. பாஜக அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் இனி அடுத்த 9 மாதத்தில் செயல்பட போவதை பொறுத்தும், திமுகவின் செயல்பாடுகளை பொறுத்தும் இந்த கணிப்புகளில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதால் கட்சிகள் அனைத்துமே சாதூர்யமாக செயல்பட்டு வருகின்றன.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications