இந்தியாவுக்கான வரி கேன்சல்? டிரம்பும் - மோடியும் நண்பர்கள் ஆகிவிட்டனர்.. பியூஸ் கோயல் குட்நியூஸ்
டெல்லி: 50 சதவீத வரியால் டிரம்ப் - மோடி இடையேயான நட்பு மோசமானத. ஆனால் தற்போது டிரம்ப் தனது நடவடிக்கையை மாற்றி நம் நாட்டிடம் இறங்கி வந்துள்ளார். இதற்கிடையே தான் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய குரத்து அதிக கவனம் பெற்றுள்ளது. ‛‛இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்தியாவும் - அமெரிக்காவும் நட்பு நாடுகள். இருநாடுகளின் தலைவர்களும் நண்பர்கள். ஒவ்வாரு சூழ்நிலைகளும் திருப்திகரமாக தீர்க்கப்படும்'' என்று அவர் கூறியிருப்பது நம் நாட்டுக்கு அமெரிக்க விதித்த 50 சதவீத வரியை டிரம்ப் ரத்து செய்கிறாரா? என்ற பெரிய எதிர்பார்ப்ப எழுந்துள்ளது. கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்தியா செயல்படும். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்று மத்திய அரசு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க இருநாடுகள் இடையேயான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லியில் நேற்று முன்தினம் அமெரிக்க பிரதிநதிகள் நம் நாட்டின் வர்த்தக அமைச்சக அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக உதவி பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான அதிகாரிகள் இந்த மீட்டிங்கில் பங்கேற்றனர். இந்த மீட்டிங் சுமூகமாக முடிவடைந்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், ‛‛இந்தியா - அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த் பேச்சுவார்த்தை நடந்தது. பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்தது. அவர்கள் வர்த்த துறை சிறப்பு செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினருடன் கலந்துரையாடினர்.
இந்தியாவிற்கும், அமெரிக்கவிற்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் நீடித்த முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு அதுதொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் நேர்மறையாகவும், எதிர்கால நோக்கத்துடனும் இருந்தன. பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முயற்சியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இந்தியா - அமெரிக்கா இடையே நடந்த வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தை மற்றும் பிரதமர் மோடி - டிரம்ப் இடையேயான உறவு பற்றி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி பியூஸ் கோயல் கூறியதாவது: அமெரிக்காவும், நாங்களும் கடந்த சல மாதங்களாக வர்த்தகம் தொடர்பக பேசி வருகிறோம். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை போய் கொண்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்தியாவும் - அமெரிக்காவும் நட்பு நாடுகள். இருநாடுகளின் தலைவர்களும் நண்பர்கள்.
ஒவ்வாரு சூழ்நிலைகளும் திருப்திகரமாக தீர்க்கப்படும். தூய்மை இந்தியா என்று மகாத்மா காந்தி முன்னெடுத்ததை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால் பிரதமர் மோடி அதனை புதுப்பித்து கொண்டு வந்துள்ளார். அதேபோல் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும் என்று காந்தி கூறியதை பிரதமர் மோடியும் மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்'' என்றார்.
பியூஸ் கோயலின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் அதிக கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரியால் டிரம்ப் - மோடி இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. டிரம்ப் இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போய்விட்டது என்று ஆக்ரோஷமாக பேசினார். ஆனால் தற்போது அவர் தனது டோனை மாற்றி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுடன் கைகோர்த்த நிலையில் டிரம்ப் இறங்கி வந்துள்ளார். பிரதமர் மோடியை நல்ல நண்பர். சிறந்த பிரதமர் என கூறிய டிரம்ப், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தினார். பிரதமர் மோடியை நரேந்திரா என்று செல்லமாக கூறி தனது வலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.
அதேபோல் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இலை்லை என்று சில நாட்களுக்கு முன்பு கூறினார். ஆனால் தற்போது அமெரிக்கா வர்த்தக பிரதிநிதிகள் குழு டெல்லி வந்து நேற்று முன்தினம் வர்த்தக துறை அமைச்சகத்தின் குழுவினரிடம் பேசி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவான முன்னேற்றத்தை தந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் கூறியிருந்தது. இப்போது பியூஸ் கோயலும், இருநாடுகள் இடையே நிலவும் சூழல் திருப்திகரமாக முடிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரி கேன்சல் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications