ரஷ்ய ஆயில், ஜீரோ வரி.. ஏகப்பட்ட சலுகைகளை சொன்ன டிரம்ப்.. மவுனமாக இருக்கும் இந்தியா.. தர்மசங்கடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக டீல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா குறைத்துக் கொள்ளும் என்றும் அமெரிக்கா மீதான வரியை ஜீரோவாக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இந்தியா தரப்பில் இந்த விவகாரங்கள் தொடர்பாக இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை. மவுனமே இந்தியாவின் பதிலாக இருக்கிறது.

இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக டீல் தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. இதன் மூலம் இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 50%ல் இருந்து 18%ஆக சரியும். கூடுதல் வரியால் இந்தியாவில் பல்வேறு பிஸ்னஸ்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே இருக்கும்.

India US deal Stopping Russian oil Zero tariff India is silent despite Trump announcements

பல கேள்விகள்

அதேநேரம் இந்த விவகாரத்தில் இந்தியா நிறைய விஷயங்களை விட்டுத் தந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை ஜீரோவாக்குவது மட்டுமின்றி, இதர வர்த்தகத் தடைகளையும் நீக்குவதாக உறுதியளித்து இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல ரஷ்யக் கச்சா எண்ணெய்யையும் இந்தியா குறைக்கும் என சொல்லி இருக்கிறார். அதேநேரம் இதற்கெல்லாம் இந்தியாவின் பதில் மவுனமாகவே இருக்கிறது.

அமெரிக்கா

முன்னதாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியது மகிழ்ச்சி தருகிறது. மோடி எனது சிறந்த நண்பர். ஒரு நாட்டின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்.. வர்த்தகம், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம்.

ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தி கொண்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய மோடி ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இது உதவும். அமெரிக்காவிற்கு எதிரான வரிகள் மற்றும் இதர தடைகளை ஜீரோவாக குறைப்பதற்கும் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது" எனப் பதிவிட்டு இருந்தார்.

பிரதமர் மோடி

இது டிரம்ப் வசம் இருந்து வந்த அறிவிப்பு..! அதேநேரம் பிரதமர் மோடியிடம் இருந்து வந்த அறிவிப்பு கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. அவர் வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது குறித்து மட்டுமே குறிப்பிட்டு இருந்தார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அல்லது அதை நிறுத்துவது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் இந்தியா என்ன முடிவு எடுத்துள்ளது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

ரஷ்ய கொள்முதலை நிறுத்த வேண்டும் என டிரம்ப் நீண்ட காலமாகவே இந்தியாவிடம் வலியுறுத்தி வந்தார்.. தற்போது, இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 35 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து பெறுகிறது. கடந்த சில மாதங்களாகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவது படிப்படியாகக் குறைந்தே வந்தது. இதற்கு வேறு பல காரணங்கள் இருந்தன. இந்தச் சூழலில் தான் இப்படியொரு டீல் போடப்பட்டு இருக்கிறது.

மவுனமே பதில்

இந்தியா ரஷ்யா இடையே பல காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது. எனவே, உடனடியாக ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை ஜீரோவாக்கவும் வாய்ப்பில்லை. எனவே, இந்தியா இந்த விவகாரத்தில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதில் தெளிவு இல்லாத சூழலே இருக்கிறது. இந்த டீலில் இந்தியா எதையெல்லாம் கொடுத்துள்ளது என்பது குறித்து பல கேள்விகள் இருக்கும் நிலையில், அதற்கு மவுனமே பதிலாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+