Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா உடனான போட்டி.. பாகிஸ்தான் போட்ட 4 கண்டிஷன்கள்.. திட்டவட்டமாக நிராகரித்த ஐசிசி! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடுமா என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து 4 முக்கிய கோரிக்கைகள் போடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதில் 3 கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்படுகிறது. மற்ற போட்டிகள் அனைத்துமே இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. அதன்படி இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி இலங்கையில் நடக்கவிருந்தது.

India vs Pakistan ICC clearly Rejects PCB three demands out of Four ahead T20 World Cup 2026

5 மணி நேரப் பேச்சுவார்த்தை

இருப்பினும், இந்தப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சில முக்கிய கோரிக்கைகளை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது. 4 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதில், மூன்று முக்கிய கோரிக்கைகளை ஐசிசி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்ட முடிவை எடுக்க பிசிபி தலைவர் மொஹ்சின் நக்விக்கு ஐசிசி ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது. அவர் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப்புடன் கலந்தாலோசித்து இறுதி நிலைப்பாட்டைத் தெரிவிப்பார் எனத் தெரிகிறது. எனவே, இந்திய-பாகிஸ்தான் போட்டி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை காலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 கண்டிஷன்

ஐசிசி முன் நான்கு முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியதற்காக வங்கதேசம் தண்டிக்கப்படக்கூடாது, ஐசிசி வருவாயில் முழுப் பங்கையும் வங்கதேசத்திற்குத் தர வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது.

அடுத்து, உள்நாட்டு அமைதியின்மை காரணமாகக் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறவிருந்த மகளிர் டி20 உலகக் கோப்பை துபாய்க்கு மாற்றப்பட்டது. இதற்காக இழப்பீடாக அந்நாட்டிற்கு வேறு ஒரு சர்வதேச தொடரை நடத்தும் உரிமை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த சுழற்சியில் U-19 உலகக் கோப்பை தர ஓகே சொல்லப்பட்டது.

நிராகரிப்பு

மூன்றாவதாக, இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி ஊக்கப்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரியது. இருப்பினும், இதில் தலையிட ஐசிசி மறுத்துவிட்டது. இருதரப்புத் தொடர்கள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என ஐசிசி நிராகரித்தது.

இந்தியா- பாகிஸ்தான்- பங்களாதேஷ் முத்தரப்பு தொடர் மற்றும் இந்தியாவின் வங்கதேச சுற்றுப்பயணம் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அந்தக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. இருதரப்பு/முத்தரப்பு தொடர்களைக் கட்டாயப்படுத்தத் தனக்கு அதிகாரம் இல்லை என ஐசிசி உறுதியாகத் தெரிவித்தது.

இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அரசு புறக்கணிக்க முடிவெடுத்தது தொடர்பாக ஐசிசி தொடர்ச்சியாக பிசிபி உடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடந்த நிலையில், அதில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

என்ன நடக்கும்!

இந்த விவகாரத்தில் பிசிசிஐ இதுவரை தனது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஐசிசி என்ன சொல்கிறதோ, அதைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணித்தாலும் கூட இந்திய அணி ஐசிசி விதிகள் படி செயல்படும் எனத் தெரிகிறது.. அதாவது திட்டமிட்டபடி இலங்கைக்குச் சென்று, பயிற்சியில் கலந்து கொள்ளும். போட்டி நாளில் மைதானத்திற்கும் செல்லும். பாகிஸ்தான் களத்தில் இறங்கத் தவறினால், போட்டியை ரத்து செய்வது குறித்து போட்டி நடுவர் முடிவெடுக்கும் வரை காத்திருக்கும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+