India, Atom bomb: இரும்பு தூணே வெண்ணையாக உருகும்.. 2 லட்சம் பேர் அழிவார்கள்.. இந்தியா அணுகுண்டு வீசினால் பாக். நிலை?
டெல்லி: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அனல் பறக்கிறது. இந்த சூழலில், பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், அதன் தீய நோக்கங்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்து, தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபத்தில், பாகிஸ்தான் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டது. ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா, பதான்கோட் விமானப்படை தளம் உள்ளிட்ட பகுதிகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்த முயன்றது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை இந்தியாவின் அதிநவீன எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து, பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முற்றிலுமாக முறியடித்தன. பதான்கோட் விமானப்படை தளத்திலும் multi-layered air defence network மூலம் இந்திய விமானப்படை தாக்குதலைத் தடுத்து நிறுத்தியது.

இந்த வான்வழித் தாக்குதல் முயற்சிகளுக்கு முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சியும் நடைபெற்றது. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏழு ஊடுருவல்காரர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி, அவர்களின் முயற்சியை முறியடித்தது.
அத்துமீறி ஆபத்து தெரியாமல் வாலாட்டும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் மற்றும் பயங்கரவாத முயற்சிகளுக்கு பதிலடியாக, இந்தியா தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. இன்று காலை (மே 9, 2025), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா ராணுவ முகாமில் இந்தியா அதிரடி டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தற்போது பாகிஸ்தானில் பெரும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை கோபப்படுத்த வேண்டாம்
பொது மக்கள் மீது கோழைத்தனமாக பாகிஸ்தான் தாக்குவதால் இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. இந்த உச்சகட்ட பதற்ற சூழலில், ஒருவேளை அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சி அல்லது இஸ்லாமாபாத் போன்ற நகரங்களில் அணு குண்டு வெடித்தால் என்னவாகும் என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஒரு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளன.

100 சூரிய பிரகாசம்
அந்த அறிக்கையின்படி, ஒரு சக்திவாய்ந்த அணு குண்டு வெடித்தால், அதன் வெளிச்சம் 100 சூரியன்களுக்குச் சமமாக இருக்கும். வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு கண் பார்வை நிரந்தரமாகப் பறிபோகக்கூடும். intense வெளிச்சத்துடன், வெப்பநிலையும் ஒரு மில்லியன் டிகிரி வரை உயரும் வாய்ப்புள்ளது, இதனால் மனிதர்களும் கட்டிடங்களும் சாம்பலாகிவிடும்.

அணு குண்டு என்ன செய்யும்
வெடிப்பின் அதிர்வால் ஏற்படும் காற்று (Blast wind) மிகவும் வேகமாக வீசி, 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் என எதுவுமே மிஞ்சாது, அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுவிடும். இந்த சூறாவளி தீப்பிழம்புகளுடன் சேர்ந்து வரும், இது அந்த பகுதியை, முழுமையாகச் சூடாக்கிவிடும். தாவரங்களும் மரங்களும் காய்ந்து இறந்துவிடும், எஃகு மற்றும் கண்ணாடி கூட உருகத் தொடங்கும்.
2 லட்சம் பேர் கதி
வானத்தில் ஒரு பெரிய கரு மேகம் உருவாகும், இதில் உள்ள கதிரியக்கத் துகள்கள் 100 கிலோமீட்டர் வரை பரவி, உயிர்க்கொல்லி கதிர்வீச்சை ஏற்படுத்தும். அணு குண்டு வெடிப்பின் முதல் மணிநேரத்திலேயே சுமார் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும் என்றும், அதற்குப் பிறகு மாதக்கணக்கில் ஒரு லட்சம் பேர் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை கூறுகிறது. அணு குண்டு வெடிக்கும் இடம் ஒரு மிகப்பெரிய சுடுகாடாக மாறிவிடும். உயரமான கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் பெரிய எஃகு தூண்கள் வெண்ணெய் போல உருகிவிடும். மணல் அத்தகைய வெப்பநிலையை அடைந்து, அது பாப்கார்ன் போல வெடிக்கும். வெடிப்புக்கு அருகில் இருப்பவர்கள் கடுமையான எரிச்சல் உணர்வைச் சந்திப்பார்கள்.

பாகிஸ்தானே ஜாக்கிரதை
பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் செயல்கள் மற்றும் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க எடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அணு ஆயுதப் போரின் சாத்தியம் குறித்து எழும் விவாதங்கள், பாகிஸ்தானின் நகரங்கள் எதிர்கொள்ளக்கூடிய பேரழிவின் தீவிரத்தையே காட்டுகின்றன. இந்தியா தனது பாதுகாப்புத் திறனை நிரூபித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டைக் கைவிட்டு, பிராந்திய அமைதியைப் பேணுவதன் அவசியம் இந்தச் சூழலில் மேலும் வலியுறுத்தப்படுகிறது.

-
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications