டிரம்பை மதிக்காத இந்தியா! F35 போர் விமானம் வேண்டாம்!114 ரபேல் விமானங்களை இறக்கும் இந்தியா! பின்னணி
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை தருவதாக கூறினார். ஆனாலும் நம் நாடு அதற்கு ‛ஓகே' சொல்லவில்லை. இதனால் டிரம்ப் கோபமாகி நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறது. இதற்கிடையே தான் நம் நாடு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவில் உறுதியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கும் விமானப்படை மிகவும் முக்கியம். தரைப்படை, கடற்படையால் நீண்டதூரம் சென்று உடனடியாக தாக்க முடியாது. ஆனால் அனைத்து இடங்களிலும் மின்னல் வேகத்தில் சென்று தாக்க வேண்டும் என்றால் அது விமானப்படையால் மட்டுமே முடியும். இதனால் தான் ஒவ்வொரு நாடுகளும் தங்களின் விமானப்படைகளை பலப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் நம் நாடும் விமானப்படையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 114 ‛ரஃபேல்' போர் விமானங்களை வாங்க நம் நாடு அதிக ஆர்வமாக உள்ளது. இது 4.5 தலைமுறையை சேர்ந்தது.
ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் சேர்ந்து உள்நாட்டு உற்பத்தியாக நம் நாடு ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிப்பது தொடர்பான திட்டம் விமானப்படை சார்பில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அது தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இன்னும் சில நாட்களில் உயர்மட்ட கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் பிரான்சிஸ் நிறுவனத்துடன் சேர்ந்து உள்நாட்டில் 114 ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து பயன்படுத்துவது பற்றி பற்றி விவாதித்து இறுதி செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பாகும்.
சமீபத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வழியாக பாகிஸ்தானை நம் நாடு பந்தாடியது. அப்போது ‛ரஃபேல்' போர் விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. இது நம் நாட்டை உற்சாகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ரஃபேல் ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் M-88 இன்ஜின் பராமரிப்பு, பழுது பார்த்தல், சீரமைப்பு உள்ளிட்டவற்கான மையத்தை ஹைதராபாத்தில் அமைக்க பிரான்சு திட்டமிட்டுள்ளது. இது நம் நாட்டை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதனால் தான் நம் நாடும் ரஃபேல் போர் விமானங்களை கூடுதலாக வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டுகிறது. இந்த திட்டம் சாத்தியாகும் பட்சத்தில் இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு துறை சார்ந்த மிக முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும். அதுமட்டுமின்றி ஏற்கெனவே நம் நாட்டின் விமானப்படையிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நம்முடைய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. இப்போது 114 ரஃபேல் விமான ஒப்பந்தம் செய்தால் நம் பாதுகாப்பு படைகளில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கை 176 ஆக உயரும்.
மேலும் உள்நாட்டில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் பட்சத்தில் டாடா நிறுவனமும், டஸ்ஸோ நிறுவனமும் இந்த திட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் விமான தொழில்நுட்பங்களை கற்பதோடு, நம் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதேவேளையில் பொதுவாக உள்நாட்டு உற்பத்தி என்றால் குறிப்பிட்ட தயாரிப்பில் 60 சதவீதம் வரை நம் நாட்டின் பொருட்கள் இருக்கும். ஆனால் இந்த ரஃபேல் திட்டத்தில் மட்டும் 30 சதவீதம் வரை மட்டுமே நம் நாட்டின் உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஃபேல் போர் விமானங்கள் நவீன தொழில்நுட்பம் கொண்டது. 4.5 வது தலைமுறையை சேர்ந்தது. தற்போது அமெரிக்கா, சீனா, ரஷ்யா 5ம் தலைமுறை விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. ஆனால் நம் நாடு 4.5 ம் தலைமுறை விமானத்தை தான் பயன்படுத்தி வருகிறது. நம் நாட்டுக்கு அமெரிக்கா தனது எஃப் 35 எனும் 5ம் தலைமுறை போர் விமானத்தை தர முன்வந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவும் தனது சு - 57 ரக 5ம் தலைமுறை விமானத்தை நமக்கு தர முன்வந்தது.
ஆனால் அதன் விலை அதிகம். அதுமட்டுமின்றி அமெரிக்கா விமானத்தை தருவதாக கூறினாலும் எப்போது வேண்டுமானாலும் காலை வாரும். தொடர்ந்து தாமதத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி டிரம்ப் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். இதனால் டிரம்பை நம்புவதற்கு நம் நாடு தயாராக இல்லை. அதேபோல் ரஷ்யா நம் நாட்டுக்கு நெருங்கிய நட்பு நாடு தான். ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு ஏராளமான தளவாடங்களை வாங்கி பயன்ப்டுத்தி வருகிறது. விமானப்படை விமானங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவின் தயாரிப்பாக உள்ளன. இதனால் ரஷ்யா - நம் நாட்டுக்கு இடையே நெருக்கமான பந்தம் உள்ளது.
இருப்பினும் தற்போது உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. அமெரிக்கா ரஷ்யா மீது தடைகளை விதித்து வருகிறது. இப்படியான சூழலில் ரஷ்யாவிடம் இருந்து சு-57 ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தாலும் அது உரிய நேரத்தில் கிடைப்பது சந்தேகம் தான். இதனால் தான் நம் நாடு Su-57 போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்திய விமானப்படைக்கு வழங்க முன்வந்துள்ள போதும், இந்தியா பிரான்ஸ் நாட்டின் 4.5 தலைமுறையை சேர்ந்த ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications