தரைவழி தாக்குதலுக்கு ரெடி.. பாகிஸ்தானுக்கு வார்னிங் கொடுத்த ராணுவ தளபதி.. அதிரடி
டெல்லி: ‛‛ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் முடியவில்லை. இந்த நடவடிக்கையின்பேது தரைவழி தாக்குதல்களை தொடங்கி நம் ராணுவம் தயாராக இருந்தது. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தான் சீண்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும்'' என்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்தரி திவேதி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நம் நாட்டின் ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தெளிவான அரசியல் வழிக்காட்டுதல் மற்றும் முழு சுதந்திரத்துடன் உரிய பதிலடி கொடுத்தல் உள்ளிட்டவற்றுக்கான முப்படைகளின் ஒருங்கிணைப்பு பணிக்கு உதாரணம் தான் ‛ஆபரேஷன் சிந்தூர். இந்த பதிலடி நடவடிக்கை தொடரும். ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் தவறு செய்தால் தரைவழி தாக்குதல் நடத்த நம் ராணுவம் தயாராக இருந்தது. நம் ராணுவம் 9 பயங்கரவாத இலக்குகளில் 7யை தரைமட்டமாக்கியது. அதன்பிறகு பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்து முக்கிய பங்காற்றியது.
கடந்த ஆண்டில் உலகளவில் ஆயுத மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த உலகளாவிய மாற்றங்கள் ஒன்றை நமக்கு உணர்த்துகிறது. அது என்னவென்றால் தயார் நிலையில் இருக்கும் நாடுகள் வெற்றி பெறுகின்றன. இந்த சூழலில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நம் நாட்டின் சீரான, உறுதியான பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்துள்ளது. இது நம் நாட்டின் தயார் நிலை, துல்லிய தாக்குதல் மற்றும் தெளிவான முடிவு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியது.
மத்திய ஆயுத காவல் படைகள், உளவு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில நிர்வாகம், உள்துறை அமைச்சகம், ரயில்வே உள்பட பிற அமைச்சகங்கள் உள்பட தேசிய அளவில் உள்ள அனைத்து தரப்பினரின் முனனைப்பான பங்களிப்பை நான் பாராட்ட விரும்புகிறேன்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வாலாட்டினால் வரும்காலத்தில் தரைவழி தாக்குதல் கூட நடத்துவோம் என்பதை உபேந்திர திவேதி வார்னிங்காக வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications