இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை!
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

பேசவில்லை
அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய கருத்துக்கள் சொன்னார்கள். ஆனால் இந்திய அரசு சார்பாக எந்த விதமான அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

உன்னிப்பாக கவனிக்கிறோம்
இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் மாற்றங்கள் குறித்து இன்று இந்திய வெளியுறவுத்துறை சார்பாக அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடு. இலங்கையில் நடக்கும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். இலங்கையில் ஜனநாயகம் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய பந்தம் உள்ளது.

உதவி தொடரும்
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் தொடரும். இலங்கையில் நடந்து வரும் ஆட்சி மாற்றம் பற்றி இந்தியா முக்கிய முடிவுகளை தேவைப்படும் சமயங்களில் எடுக்கும். இலங்கைக்கு தேவையான பொழுது இந்தியா தேவையான அரசியல் உதவிகளை வழங்க தயாராக இருக்கிறது.

பெரிய பரபரப்பு
இந்த நிலையில் இந்தியாவின் இந்த அறிக்கை இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கைக்கு அரசியல் ரீதியான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருப்பது தமிழர்கள் இடையே அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications