புதிய மைல்கல்.. 100 கோடி வாக்காளர்களை தொடும் இந்தியா.. இப்போ எவ்வளவு? தேர்தல் ஆணையம் தந்த டேட்டா
டெல்லி: நம் நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடியை விரைவில் தொட்டு புதிய சாதனை படைக்க உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம்ஆத்மி தான் டெல்லியில் ஆட்சி புரிந்து வருகிறது. முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிஷி முதல்வராக உள்ளார்.

டெல்லி சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 23ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 36 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்நிலையில் தான் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 8 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் இன்று டெல்லியில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் நம் நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்பான முக்கிய விபரங்களை அவர் வெளியிட்டார். அதன்படி நம் நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது விரைவில் 100 கோடியை தொட உள்ளது என்று அவர் கூறினார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:
கடந்த 2024ம் ஆண்டில் உலகளவிலான மக்கள்தொகையில் 3ல் 2 பங்கு மக்கள் வெவ்வேறு தேர்தல்களில் வாக்களித்தனர். நம் நாட்டை பொறுத்தவரை 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடந்து முடிந்தது. லோக்சபா தேர்தலை எடுத்து கொண்டால் ஓட்டு சதவீதம், பெண்கள் அதிகம் ஓட்டளித்தது என்று சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி நம் நாட்டில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 99 கோடியை கடந்துவிட்டது. விரைவில் நம் நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கும். இது நம் நாட்டுக்கு புதிய சாதனையாக அமையும்.'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications