வாலாட்டுமா சீனா? ஒட்ட நறுக்க இந்தியா தயார்! களமிறக்கப்பட்ட ’இரும்பு அரக்கன்’.. அசைச்சுக்கவே முடியாது
டெல்லி: மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவிடம் வேலையை காட்டியதைப் போல இந்தியாவிடம் சீனா அத்துமீற நினைத்தால் பதிலடி கொடுக்க விமானப்படை தயாராகி வருகிறது. இதற்காக ஒத்திகையும் ஏற்கனவே பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் வடகொரியா - தென் கொரியா, ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா - ஈரான் உள்ளிட்ட போர்கள் உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லெபனான், காசா உள்ளிட்ட நாடுகள் மீது பலமுனை தாக்குதலை இஸ்ரேல் தொடுத்து வரும் நிலையில் ஈரானும் களத்தில் குதித்து இருப்பது உலக அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாவது உலகப்போர், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக அளவில் பல நாடுகள் அணிகளாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒரு அணியாகவும், ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் எதிரி நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக உளவு செயற்கைக்கோள்கள், உளவாளிகளை அந்தந்த நாடுகளின் உளவு அமைப்புகள் ஏவியிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள மாண்டானா மாகாணத்தில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்து சென்றது. அந்த பகுதியில் தான் அமெரிக்காவின் பல தாக்குதல் ஏவுகணைகள், அணு ஆயுத ஏவுகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அது சீனாவுக்கு சொந்தமான உளவு பலூன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பலூனை அமெரிக்க விமானப்படையும் கடற்படையும் தொடர்ந்த நிலையில் அலாஷ்காவுக்கு அருகில் உள்ள வான்வெளி பரப்பில் விமானப்படையில் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து அதன் பாகங்கள் தெற்கு கரோலினா கடற்கரையில் விழுந்தன. தொடர்ந்து அது சீனாவின் உளவு பலூன் தான் இது என அமெரிக்கா குற்றம் சாட்டியதோடு தங்கள் நாட்டை உளவு பார்க்க பலூனை அனுப்பியதாக புகார் தெரிவித்தது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் பறந்த பலூன் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தது தான் எனவும் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பலூன் காற்றின் திசை மாறியதால் அமெரிக்காவுக்கு வந்ததாக சீனா விளக்கம் அளித்தது. இருந்த போதும் அமெரிக்கா அதனை மறுத்தது. தொடர்ந்து இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளான நிலையில் சீனாவின் அத்துமீறலுக்கு கண்டனங்கள் தொடர்ந்தது.. சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா மீது சீனா உளவு பலூனை அனுப்பியது சட்ட விரோதம் என குற்றம் சாட்டப்பட்டது.
அதே நேரத்தில் உளவு பலூன் விவகாரத்தில் சீனா இன்னும் ஆட்டம் காட்டி வருவதாகவே கூறப்படுகிறது. பொதுவாக பயணிகளை ஏற்றி செல்லும் விமானங்கள் 40,000 அடி வரை பறக்கும். போர் விமானங்கள் 65 ஆயிரம் அடிவரை பறக்கும். ஆனால் சீனாவின் உணவு பலூன்கள் ஒரு லட்சத்து 12 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கக்கூடியவை. இதனை ரேடாரில் கூட கண்டுபிடிப்பது சிரமம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பெருங்கடல் மற்றும் இந்திய கடற்பகுதிகளில் உளவு பலூன்கள் உலாவலாம் என்ற அச்சம் எழுந்திருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே அந்தமான் நிக்கோபார் பகுதியில் உளவு பலூன் ஒன்று பறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு இந்திய போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அந்த பலூன் சுட்டு வீழ்த்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவைப் போல இந்தியாவிலும் உணவு பலூன் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதனை சுட்டு வீழ்த்தும் பயிற்சியை இந்திய விமானப்படை மேற்கொண்டுள்ளது.
இதற்காக இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் நுழைந்தது போல சீன உளவு பலூனை விட சற்று சிறிதான பலூன் மாதிரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 50,000 அடி உயரத்தில் பறக்க விடப்பட்டு அதை ரபேல் விமானம் மூலமாக சுட்டு வீழ்த்தி பயிற்சி எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக ரபேல் விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த 150 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் மீட்டியர் ஏவுகணை மற்றும் 70 கிலோமீட்டர் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அளிக்கும் எம்ஐசிஏ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவரும் காலங்களில் வங்காள விரிகுடா இந்திய கடற்பகுதிகளில் உணவு பலன்களை பறக்க விட்டால் அவற்றை சுட்டு வீழ்த்த இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பயிற்சி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாகவும் இந்தியா எதற்கும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications