டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லடாக் மோதல்.. ரஷ்யாவில் நடந்த இந்தியா - சீனா பேச்சுவார்த்தை.. 5 உடன்படிக்கைகள் கொண்ட புதிய ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடந்த ஆலோசனையில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சீனா இடையில் லடாக் மோதல் நிலவும் நிலையில் நேற்று ரஷ்யாவில் இந்தியா - சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே ஆலோசனை நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இடையே ஆலோசனை நடைபெறுகிறது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எல்லையில் பிரச்சனை குறித்தும், எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவிப்பதும் குறித்தும் இந்திய தரப்பு கேள்விகளை எழுப்பியது. எல்லையில் இந்தியாதான் அத்துமீறுகிறது என சீனா இதில் குற்றச்சாட்டு வைத்தது.

இந்தியா சீனா மோதலை தீர்க்க கடைசி வாய்ப்பு.. ஜெய்சங்கர், வாங் யி சந்திப்பு குறித்து சீன அரசு ஊடகம்இந்தியா சீனா மோதலை தீர்க்க கடைசி வாய்ப்பு.. ஜெய்சங்கர், வாங் யி சந்திப்பு குறித்து சீன அரசு ஊடகம்

மீட்டிங் என்ன

மீட்டிங் என்ன

இந்த மீட்டிங் தொடர்பாக தற்போது இரண்டு நாட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் , இரண்டு நாட்டு தலைவர்கள் ஆக்கபூர்வமான முறையில் எல்லையில் பிரச்சனை குறித்து பேசினார்கள். எல்லையில் படைகளை பின்வாங்குவது தொடர்பாகவும், அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகவும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை மோதல்

எல்லை மோதல்

எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை குவிப்பதை இந்தியா கேள்வி எழுப்பி உள்ளது. 1975க்கு பின் எல்லையில் சீனா அதிக அளவில் படைகளை கொண்டு வந்துள்ளது. இது பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சீனாவிடம் இந்தியா இந்த மீட்டிங்கில் கூறியுள்ளது. சீனா இந்த படைகளை உடனே வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்று இந்திய தரப்பு கேட்டுள்ளது.

பதில் இல்லை

பதில் இல்லை

இதற்கு சீன தரப்பு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. முறையான விளக்கத்தை அளிக்கவில்லை. எல்லை பிரச்சனை தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மீறி சீனா இப்படி படைகளை குவித்து வருகிறது என்று இந்திய தரப்பு கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்று சீன தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

உடன்படிக்கை

உடன்படிக்கை

இந்தியா - சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே நடந்த ஆலோசனையில் 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா இடையே நேற்று செய்யப்பட 5 உடன்படிக்கைகள் கொண்ட ஒப்பந்தம்:


1. இதுவரை இரண்டு நாட்டு தலைவர்கள் செய்த ஒப்பந்தங்களை மதித்து அதற்கு ஏற்றபடி இரண்டு நாட்டு ராணுவ வீரர்கள் செயல்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடு மோதலை உருவாக்க கூடாது.

2. எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலை இரண்டு நாடுகளுக்கு விருப்பமான விஷயம் கிடையாது. இரண்டு நாடும் இதை விரும்பவில்லை. எல்லையில் இருக்கும் படைகளை இதனால் உடனுக்குடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், படைகளை வாபஸ் வாங்க வேண்டும், எல்லையில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு, பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. இதற்கு முன் செய்யப்பட்ட அனைத்து எல்லை பிரச்சனை தொடர்பான ஒப்பந்தங்கள், விதிகள் அனைத்தையும் மதிக்க வேண்டும்.

4. இரண்டு நாடுகளும் சிறப்பு பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் WMCC எனப்படும் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை குழு எப்போதும் போல பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும்.

5. எல்லையில் நிலைமை சரியான பின் இரண்டு தரப்பும் எல்லையில் நம்பிக்கை மற்றும் அமைதியை கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும். இரண்டு தரப்பும் நம்பிக்கையை ஊட்ட கூடிய செயல்களை செய்ய வேண்டும், என்று இந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ளது.

English summary
Indian and Chinese foreign ministers reach a consensus of 5 points in the meet yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X