பெரும் பனி மழை: பொருட்படுத்தாத நமது ராணுவ வீரர்கள்! கர்ப்பிணியை சுமந்து காப்பாற்றி தீரம்! நெகிழ்ச்சி
டெல்லி: காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து கொண்டு மருத்துவமனையில் சேர்த்த ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Recommended Video
ஜம்மு காஷ்மீரின் சோபியானில் உள்ளது சைனார் கார்ப்ஸ் என்ற ராணுவ பயிற்சி மையம். இந்த மையத்திற்கு ராம்நகரி பகுதியிலிருந்து நேற்று முன் தினம் ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவர், ராம்நகரில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி வந்துவிட்டதாகவும் அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.

பனிப்பொழிவு
ஜம்முவில் பனி, மழையை போல் பொழிந்து வருகிறது. வெப்பநிலையும் மைனஸில் சென்றுவிட்டது. எனினும் கர்ப்பிணிக்கு உதவ ராணுவ வீரர்கள் முன்வந்தனர். உடனடியாக ராம்நகரி பகுதிக்கு ஸ்ட்ரெச்சருடன் சென்றனர். அங்கு பிரசவ வலியில் தவித்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் கிடத்தினர்.

பனி மிகுந்த சாலை
பின்னர் வழிநெடுகிலும் பனிப்பொழிந்த சாலையில் அந்த பெண்ணை சுமந்து கொண்டு சோபியான் மாவட்ட மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் ராணுவ வீரர்கள் அந்த கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்த்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

கர்ப்பிணியை சுமந்த வீரர்கள்
பனிநிறைந்த சாலையில் கர்ப்பிணியை சுமந்து கொண்டு செல்லும் காட்சிகளை சைனார் கார்ப்ஸ் பிரிவு வீடியோ வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வரும் நிலையில் சமூகவலைதளத்தில் ராணுவத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன. காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

மைனஸில் வெப்பநிலை
வடக்கு காஷ்மீரில் குல்மார்க் பகுதியில் வெப்பநிலையானது மைனல் 4.6 டிகிரியாக உள்ளது. அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளப்படும் பஹல்காம் முகாம் அருகே மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய இந்த மோசமான வானிலை 40 நாட்கள் நீடிக்கும். இதற்கு சில்லா ஐ காலன் என சொல்வார்கள். அப்படியென்றால் பகுதி முழுவதும் குளிர் சூழ்ந்து நீர் நிலைகள் உறை பனியாக மாறும் காலம். ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications