இந்திய எல்லையில்.. சீனா கட்டியது கிராமம் இல்லை, ராணுவ கேம்ப்பாம்! பகீர் தகவல்.. ஊடுருவல் முயற்சியா?
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இது குறித்து இந்திய ராணுவத்தின் கிழக்குக் கமெண்ட் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோசமான சூழலே நிலவி வந்தது.
அதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், நிலைமை மேலும் மோசமானது. அதன் பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, நிலைமை சற்று மேம்பட்டது.

சீனா
இதையடுத்து இரு நாடுகளும் எல்லையில் ராணுவத்தைத் தொடர்ந்து குவித்து வருகிறது. இதனால் எல்லையில் ஒரு வித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அருணாச்சல பிரதேச எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகிறது. அங்கு எல்லைப் பகுதியில் சீனா பல்வேறு கிராமங்களைக் கட்டி வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி பாலங்கள், சாலைகளிலும் முதலீடு செய்து வருகிறது.
Recommended Video

லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா
இதற்கிடையே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சீனா கட்டுமான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்குக் கமெண்ட் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஆர் பி கலிதா கூறுகையில், "எல்லையில் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியத் தரப்பு அதன் உள்கட்டமைப்பு மற்றும் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

கிராமங்கள் மட்டுமில்லை
திபெத் பிராந்தியத்தில் எல்லையில் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. மறுபுறம் சாலை, ரயில் மற்றும் விமான இணைப்புகள் மற்றும் 5 ஜி மொபைல் நெட்வொர்க்கை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படும் போது, எளிதாகப் படைகளை அணிதிரட்ட நம்மால் முடியும். சீன அதிகாரிகள் எல்லையில் கிராமங்களைக் கட்டியுள்ளனர். அவை கிராமங்கள் மட்டுமில்லை. ராணுவ தேவைக்கும் கூட அவை பயன்படுத்தப்படலாம்.

கண்காணிக்கிறோம்
நாங்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாங்கள் எங்கள் உள்கட்டமைப்பு மற்றும் திறன்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இவை எங்களை ஒரு வலுவான நிலையில் வைத்திருக்கின்றன. இந்தியா ராணுவம் எதற்கும் தயாராகவே உள்ளது. சவலான நிலப்பரப்பு, சீரற்ற வானிலை ஆகியவை அங்கு பணியாற்றுவதில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் திட்டங்களை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது" என்றார்

எல்லை பிரச்சினை
எல்லையில் இரு தரப்பும் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருவது பற்றி அவர் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையே துல்லியமாக எல்லை வரையறுக்கப்படவில்லை. குறிப்பாக மக்மஹோன் லைன் பகுதிகளில்.. இதனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் பல உடன்படாத கருத்துக்களை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான நேரங்களில், தற்போதுள்ள வழிமுறைகள் மூலம் நாங்கள் நிலைமையைக் கையாளுகிறோம், சில நேரங்களில் அது சிறு சிறு மோதல்களுக்கு வழி வகுக்கிறது.

ஊடுருவல் இல்லை
சீனா உடனான எல்லையில் ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை. அது அனுமானம் மட்டுமே. எல்லை சரியாக வரையறுக்கப்பட்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. 1962 போருக்குப் பிறகு ஊடுருவல் எதுவும் இல்லை. சீனாவில் ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் புதிய சட்டம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். புதிய நிலையை எதிர்கொள்ள எங்கள் படைகளைத் தயார்ப்படுத்தி உள்ளோம்.

சவால்கள்
சீன எல்லையில் ஏராளமான சவால்கள் உள்ளன. நாங்கள் இங்குத் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளோம். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இங்கு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் எழுந்து வருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கைச் சமாளிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications