ஐரோப்பா அக்ரிமென்ட்டால் ஆட்டம் காணும் இந்திய கார் நிறுவனங்கள்.. தாறுமாறாக சரிந்த பங்குகள்!
டெல்லி: இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கான வரி 110 சதவீதத்தில் இருந்து 40 ஆக குறையும் எனக் கூறப்படுகிறது. இதனால் சொகுசு கார்களின் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பங்கு சந்தயில் இந்திய கார் நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக சரிந்தன.
ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா தயாராகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உற்பத்தியாகும் கார்களுக்கான இறக்குமதி வரியை 110 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக இந்தியா குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டி
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஐரோப்பிய கார் நிறுவனங்களுக்கு இந்திய சந்தைகள் தாராளமாக திறந்துவிடப்படும். வோல்க்ஸ்வோகன், ரெனால்ட், மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய கார்களுக்கான இறக்குமதி பெருமளவு குறையும். இதனால், இந்த சொகுசு கார்களுக்கு இந்திய சந்தையில் அதிக மார்க்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போது இந்திய கார் சந்தையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே ஐரோப்பிய கார் நிறுவனங்கள் பிடித்துள்ளன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், ஐரோப்பிய கார் நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய கார் சந்தையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
5 சதவீதம் பங்குகள் சரிந்தன
இந்த நிலையில், பங்குச்சந்தைகளில் இந்திய கார் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 5 சதவீதம் அளவுக்கு பங்குகள் சரிந்தன. மகிந்திரா & மகிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக சரிவை சந்தித்தன.
வெளிநாட்டு கார் நிறுவனங்களுடனான கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டியதால், பங்குச்சந்தைகளில் இந்திய கார் நிறுவன பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
பெரிய ஊக்கமாக இருக்கும்
வரிகள் குறைக்கப்படுவது, வோல்க்ஸ்வேகன், ரெனோ, ஸ்டெல்லாண்டிஸ் போன்ற ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இந்தியாவில் உள்ளூர் தயாரிப்பு செய்து வரும் மெர்சிடீஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார் நிறுவனங்களுக்கும் பெரிய ஊக்கமாக இருக்கும்.
அதிக வரிகள் காரணமாக இந்திய சந்தைகளில் குறிப்பிட்ட அளவைத் தாண்டி வளர முடியாமல் சிரமப்பட்டு வந்த நிறுவனங்களுக்கு, தற்போதைய வரிச்சலுகை பெரும் நிவாரணமாக அமையும். அதே நேரத்தில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.
கார்கள் மட்டும் இன்றி
இந்தியாவின் வாகனத் துறை பெரும்பாலும் சிறிய கார்கள் (ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை விலை உள்ளவை) ஆதிக்கம் செலுத்துகின்றன. மகிந்திரா, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவனங்களே இந்த விலை ரேஞ்சில் ஆதிக்கம் செலுத்துகின்றது. எனவே, இந்த ஐரோப்பிய கார்களின் விலை இந்த ரேஞ்சில் வந்தால், மகிந்திரா, சுசுகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் கார்கள் மட்டும் இன்றி ஐரோப்பிய ஒன்றியம் ஜவுளி, ஆடைகள், நகைகள், ரசாயனங்கள், மருந்துகள் மற்றும் மின்னணுவியல் போன்ற இந்தியப் பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்கும். ஜவுளி மற்றும் காலணி தயாரிப்பு துறையில் வரிகள் குறையும். மேலும் சில பொருட்களுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்.
ராணுவம் மற்றும் பாதுகாப்பு
முன்மொழியப்பட்டுள்ள ராணுவ மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மையால் இருநாடுகளும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவில் மேலும் இணைந்து செயல்பட வழி வகுக்கும். இந்திய தொழிலாளர்கள் ஐரோப்பாவிற்கு இடம்பெயர்வதை எளிதாக்குவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெறுகிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் ஒரு தரமான மாற்றத்தைக் கொண்டு வரும்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications