டி20 வெற்றி.. பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்!
டெல்லி: டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இன்று மாலை இந்திய அணி வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. போட்டி முடிவடைந்து மேற்கு இந்திய தீவுகளிலிருந்து இந்திய அணி கிளம்ப முயன்ற நிலையில், மேற்கு இந்திய தீவை புயல் நெருங்கியது. எனவே விமான சேவை முடக்கப்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

புயல் கரையை கடந்த பின்னர் இந்திய அணிக்காக பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனிவிமானம் (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) அமெரிக்காவின் ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ்சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணி அளவில் இந்திய அணியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் பார்படாஸில் இருந்து விமானத்தில் புறப்பட்டனர்.
இந்த விமானம் சுமார் 16 மணி நேர பயணத்திற்கு பின்னர் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கிரிக்கெட் அணியினர் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மும்பை வரும் வீரர்கள் வான்கடே மைதானத்தில் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள், மும்பை விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானம் வரை பேருந்தில் பயணம் செய்கின்றனர். இந்த விழாவில் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் கூறுகையில், "இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியைகவுரவிக்கும் வெற்றி அணிவகுப்பில் எங்களுடன் சேருங்கள்! எங்களுடன் கொண்டாட ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்துக்கு வாருங்கள். தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று x தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதேபோல ரோஹித் சர்மா, "இந்த சிறப்பு தருணத்தை ரசிகர்களாகிய உங்கள் அனைவருடனும் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மும்பை மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் வெற்றி அணிவகுப்புடன் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications