பூமி திரும்பினார் "விண்வெளி நாயகன்" சுபான்ஷு சுக்லா! கலிபோர்னியா கடலில் விழுந்த "டிராகன்" காப்சியூல்
வாஷிங்டன்: கடந்த இரு வாரங்களாகச் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா நேற்று அங்கிருந்து கிளம்பினார். டிராகன் விண்கலத்தில் அவர் பூமி திரும்பிய நிலையில், கலிபோர்னியா அருகே கடல் பகுதியில் அந்த விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா கடந்த ஜூன் 25ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டார். அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அவர் விண்வெளிக்குப் புறப்பட்டார். சுமார் 24 மணி நேரம் பயணித்த அவர் மறுநாள் அதாவது ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார். கடந்த 18 நாட்கள் அவர் அங்கேயே தங்கியிருந்தார்.

பூமி திரும்புகிறார்
இந்தச் சூழலில் தான் அவர் நேற்று மீண்டும் அங்கிருந்து கிளம்பினார். டிராகன் காப்சியூல் மூலம் அவர் பூமிக்குத் திரும்புகிறார். அவரது டிராகன் காப்சியூல் இன்று பிற்பகல் 3 மணியளவில் பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தேவையான பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளன. கலிபோர்னியா கடலில் தரையிறங்கும் அவரது காப்சியூலை பத்திரமாக மீட்கவும் சிறப்புப் படை தயாராக உள்ளது.
இந்த விண்வெளிப் பயணத்தில் சுபான்ஷு சுக்லா பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாகச் சில குறிப்பிட்ட பயிர்களை விண்வெளியில் வளர்க்கும் ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியோம் 4 குழுவினர் இன்று பூமிக்குத் திரும்பும் நிலையில், பயிர் ஆய்வில் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IIST) அடுத்தகட்ட ஆய்வை ஆரம்பிக்கவுள்ளது.
பயிர் விதைகள்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பயிர் விதைகளைப் பயன்படுத்தி, ஆய்வுகளை நடத்தத் தயாராகி வருகிறது. கேரள விவசாயப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தப்படும். ஜோதி மற்றும் உமா நெல் வகைகள், கொள்ளு, தக்காளி, எள் மற்றும் கத்தரிக்காய் விதைகள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த விதைகள் இன்று பூமிக்குத் திரும்பும் நிலையில், அடுத்தகட்ட ஆய்வுகளைத் தொடங்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்து என்ன
இந்த விதைகள் இன்னும் ஓரிரு நாட்களில் திருவனந்தபுரத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிக்கு எடுத்த செல்லப்பட்ட விதைகள், விண்வெளி மையத்தில் இருக்கும் நுண்ணீர்ப்புவிசை நிலைகளுக்கு வெளிப்படுத்தப்பட்டு பூமிக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பூமியில் இப்போது அதை ஆய்வாளர்கள் வளர்ப்பார்கள். அந்த விதைகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் எந்தளவுக்கு மாறுகிறது..
என்ன நோக்கம்
நுண்ணீர்ப்புவிசை காரணமாக இதனால் வளர்ச்சியில் எதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். மொத்தம் மூன்று செட் விதைகளை ஆய்வு செய்து ஒப்பீட்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விண்வெளி குறித்த ஆய்வில் இது முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கு இடையே போடப்பட்ட பலதரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி சர்வதேச நாடுகள் அனுப்பிய பல்வேறு ஆய்வுகளையும் சுக்லா உள்ளிட்டோர் விண்வெளியில் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எப்போது
ஒரு நாள் முழுக்க பயணித்து அவர் ஜூன் 26ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார். இரு வாரங்கல் அங்கேயே தங்கியிருந்த சுக்லா பல ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தச் சூழலில் தான் அவர் நேற்றைய தினம் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பினார். மாலை 5 மணியளவில் அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
தாமதம் ஏன்
அவருடன் 3 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கினர். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமியை வந்தடைகிறார். வெறும் 400 கிமீ வர 22 மணி நேரமா என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம். பூமி வேகமாகச் சுழன்று கொண்டு இருக்கும் நிலையில், துல்லியமான நேரத்தில் தான் பூமியின் புவி ஈர்ப்பு மண்டலத்தில் நுழைய முடியும். கொஞ்சம் மிஸ்ஸானாலும் எங்கோ ஒரு மூலையில் தரையிறங்குவது போல ஆகிவிடும். இப்படிக் காத்திருந்து வரவேண்டி இருப்பதாலேயே அதிக நேரம் ஆகிறது.
1600 டிகிரி
மேலும், பூமிக்குள் திரும்பும்போது அந்த கேப்சியூல் 1600 டிகிரி செல்சியஸ் வரை சூடாகும். அந்தளவுக்கு வேகமாக அது பூமியை நோக்கி வரும். இன்று மாலை 3 மணியளவில் அவர்களின் விண்கலம் பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதன்படி அவர்கல் இப்போது பத்திரமாக பூமியை வந்தடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் அவர்களின் விண்கலன் தரையிறங்கியது. அங்கு அவர்கள் மீட்கச் சிறப்புக் குழு தயாராக இருந்த நிலையில், அந்த குழு அவர்களை மீட்டது.
இரு வாரங்கள் விண்வெளியில் இருப்பதால் அவர்கள் உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்திருக்கும். இதனால் பூமிக்குத் திரும்பிய உடனேயே வழக்கம் போல எழுந்து நடமாட எல்லாம் முடியாது. இதனால் அவர்களை 24 மணி நேரம் வரை சிறப்பு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications