முப்படை தளபதிகளை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்.. பரபர ஆலோசனை.. முக்கிய முடிவு?
இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்றுநேரத்தில் சந்திக்கிறார்.
டெல்லி: இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்றுநேரத்தில் சந்திக்கிறார்.
பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 50கிமீ வரை புகுந்து இந்திய விமானப்படை அங்கு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் அங்கு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் 4 தரைமட்டமாக்கப்பட்டது. இதில் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அதீத போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய எல்லையில் நேற்று மாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து தற்போது இந்திய பாதுகாப்பு படையின் முப்படை தளபதிகளை சற்றுநேரத்தில் சந்திக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, ராணுவ படை தளபதி பிபின்ராவத், கடற்படை தளபதி லம்பா ஆகியோரை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.
இதில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். இதில் முப்படை தளபதிகள் வைத்த முக்கிய கோரிக்கை ஒன்றை குறித்தும் ஆலோசிக்க இருக்கிறார்கள். பாகிஸ்தான் மீதான பதிலடி குறித்து இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications