"ஒட்டுண்ணி.. வந்தேறி!" போலந்தில் இந்தியர் மீது இன ரீதியாக அவதூறு! வெளிநாடுகளில் தொடரும் அவமதிப்புகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவைத் தொடர்ந்து போலந்து நாட்டிலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியர்கள் சென்று செட்டில் ஆகியுள்ளனர். ஐடி போன்ற துறைகளில் சிறந்து விளங்குவதால் இந்தியர்களை பல்வேறு நாடுகளும் வரவேற்கின்றன.

அதேநேரம் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வருவதால் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பது பூர்வக்குடிகளின் குற்றச்சாட்டுகளாக உள்ளது.

 போலந்து

போலந்து

சமீபத்தில் கூட அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை மிக மோசமாக வசைபாடியிருந்தார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்மந்தப்பட்ட அந்த பெண் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது போலந்திலும் நடந்துள்ளது.

 இன ரீதியாக விமர்சனம்

இன ரீதியாக விமர்சனம்

அங்குள்ள இந்தியர் ஒருவரை போலந்து நாட்டை சேர்ந்த ஒருவர் மிக மோசமாக வசைபாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பி உள்ளது. அந்த நபர் இந்தியரை நோக்கி "ஒட்டுண்ணி வந்தேறி" என்று அழைக்கிறார். மேலும், "f****** up Europe" தொடங்கிப் பல ஆபாச வார்த்தைகளாலும் திட்டுகிறார். இந்தியரை நோக்கி அந்த நபர் தொடர்ச்சியாக நான்கு நிமிடங்கள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளைக் கொண்டு திட்டுகிறார்.

இந்தியர்

இந்தியர்

"நீங்கள் ஏன் போலந்தில் இருக்கிறீர்கள்? ஏற்கனவே அமெரிக்கா முழுக்க நீங்கள் தான் இருக்கிறீர்கள்" என்றும் இந்தியரைப் பார்த்துச் சாடுகிறார். இப்படி எல்லாம் திட்டுவதை அவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். அப்போதும் அமைதியாக இருக்கும் அந்த இந்தியர், வீடியோ எடுக்க வேண்டாம் என்று பொறுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து அமைதியாகச் சென்றுவிடவே முயல்கிறார்.

 யார் அவர்

யார் அவர்

இருப்பினும், அந்த நபர் விடாமல் பின்னாலேயே சென்று தொடர்ந்து இன ரீதியாகத் திட்டுகிறார். இவை அனைத்தும் இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இந்தியரை மிக மோசமாகத் திட்டிய அந்த நபர் ஜான் மினாடியோ ஜூனியர் என்பவர் என கூறப்படுகிறது. அவர் கோயிம் டிவி என்ற வெறுப்புக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்த கோயிம் டிவி தான் கொரோனாவுக்கு யூதர்கள் தான் காரணம் என்று கலிபோர்னியாவில் நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 வெறுப்பு குழு

வெறுப்பு குழு

இப்போது அவர் இந்தியரைச் சாடும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இணையத்தில் மிக மோசமாகக் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர், "போலந்தில் இருக்கும் ஒரு அமெரிக்கர், அங்குள்ள இந்தியரைப் பார்த்து வந்தேறி என்றார், அதுவும் ஆங்கிலத்தில் (போலந்தின் தேசிய மொழி போலீஷ் மொழியாகும்). இதைவிட ஒரு முட்டாள் தனத்தை உங்களால் எங்கும் பார்க்க முடியாது" எனப் பதிவிட்டுள்ளார்

 நாஜி

நாஜி

மேலும், பலரும் அந்த நபரைக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். சிலர் அவரை போலந்தில் இருக்கும் ஒரு நாஜி என்றும் சாடியுள்ளனர். சமீப காலமாகவே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீதான இன ரீதியிலான தாக்குதல் அதிகரித்து உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இந்தியர் ஒருவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரே "டர்ட்டி இந்து" என அழைத்துக் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+