ஆபத்தான பக்கவிளைவு... ஐரோப்பிய நாடுகளில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை.. இந்தியாவின் முடிவு என்ன?
டெல்லி: பல ஐரோப்பிய நாடுகளிலும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்தத் தடுப்பூசிக்கு தடை விதிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவரசகால அனுமதி தரப்பட்டுள்ளது. அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கியிருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் தடை
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தம் உரையும் பிரச்னை ஏற்படுவதால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் இதனால் தடுப்பூசிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாடுகள் அறிவித்திருந்தன. டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவிலும் தடை
இதன் அடிப்படையில் இந்தியாவிலும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியானது. இந்தத் தகவலைச் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்தியாவில் இந்தத் தடுப்பூசி எடுத்துக்கொண்ட யாருக்கும் ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படவில்லை என்றும் இருந்தாலும் இது குறித்துச் சிறப்புக் குழு விரைவில் ஆராயும் என்றும் தெரிவித்தார். எந்த ஒரு தடுப்பூசிக்குத் தடை விதிப்பதற்கு முன், அது குறித்து விரிவாக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசி
இந்த கோவிஷீல்ட் தடுப்பூசியை அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் மற்றும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து உருவாக்கியிருந்தனர். இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு தேவையான இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பொறுப்பு புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியைத்தான் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பு விளக்கம்
கோவிஷீல்டு தடுப்பூசி தான் இந்தியாவில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தடுப்பூசிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்ஸ்போட் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் மிகக் குறைவான நபர்களுக்கே உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது இயல்பான ஒன்றுதான் என்றும் இதற்காக ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசிக்குத் தடை விதிக்க தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications