“சீரியஸ்” மேட்டர்.. எட்ஜ் பிரவுசர் பயனரா நீங்க! உடனே இதை செய்யுங்க - இந்திய அரசு மீண்டும் எச்சரிக்கை
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துவதால் மக்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம்தான் இன்று வரை பெரும்பாலான கணினிகள், லேப்டாப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இணையதளத்தை பயன்படுத்த விண்டோஸ் இயங்குதளத்துடன் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் என்ற இணையதள பிரவுசரை பயன்படுத்தி வந்தது. கூகுள் குரோம், மொஜில்லா ஃபயர்பாக்ஸ் வருகைக்கு பிறகு அதன் பயன்பாடு குறைந்தது.

மைக்ரோசாப்ட் எட்ஜ்
இதனால் இண்டெர்நெட் எக்ஸ்பிளோரர் செயலியின் சேவையை நிறுத்திய மைக்ரோசாப்ட் பல்வேறு புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புடன் எட்ஜ் என்ற பெயரில் புதிய பிரவுசரை வெளியிட்டது. புதிய விண்டோஸ் அப்டேட்டுகளில் இந்த எட்ஜ் பிரவுசரும் வருகிறது. இருப்பினும் பெரும்பாலான பயனர்கள் கூகுள் குரோமை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு எச்சரிக்கை
எனவே எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைவுதான். ஆனால், புதிய அம்சங்களின் காரணமாக நாட்கள் செல்ல செல்ல எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு ஒரே வாரத்தில் 2 வது முறையாக எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

பாதுகாப்பு குறைபாடு
இதற்கு காரணம், மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை இந்திய அரசு கண்டுபிடித்து உள்ளது. குறிப்பாக எட்ஜ் பிரவுசரின் 110.0.1587.41. என்ற வெர்சனில் பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. மத்திய எலெக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்திய கணினி அவசர உதவிக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

ஹேக் செய்யப்படலாம்
மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுரை பயனர்களின் கணினியை முடக்கி ஹேக்கர்களால் பயன்படுத்த முடியும் என்றும், அவர்களால் நமது கணிணியில் உள்ள சேவைகளை மறுப்பது, கோடிங்குகளை செய்வது, சிறப்புரிமை தருவது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறுவது, தகவல்களை திருடுவது, தகவல்களை வெளியிடுவது போன்ற பணிகளை செய்ய முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தவிர்ப்பது எப்படி?
ஹேக்கர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களை தவிர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் செக்யூரிட்டி பேட்ச் எனப்படும் பாதுகாப்பு வெர்சன் அப்டேட்டுகளை பயனர்கள் செய்யுமாறும் இந்திய கணினி அவசர உதவிக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கை எட்ஜ் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications