ஆக்ஷனில் இறங்கிய இந்தியா! ஹார்முஸ் நீரிணை நோக்கி அனுப்பப்படும் போர்க்கப்பல்கள்! கொடி பறக்குதா!
டெல்லி: ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கிறது. இதனால் எரிபொருள், எல்பிஜியை சுமந்து வரும் இந்திய கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. இந்த கப்பல்களை பத்திரமாக மீட்க, நீரிணை நோக்கி இந்தியா, தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருக்கிறது.
எரிவாயுவுக்கு 90% நாம் இறக்குமதியைதான் நம்பியிருக்கிறோம். குறிப்பாக கத்தார், அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் எரிவாயு நமக்கு கிடைக்கிறது. எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல்கள், நீரிணையை கடக்க வேண்டும்.

இங்குதான் சிக்கல். ஈரான் ஆதரவு படைகள், நீரிணையை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துகின்றன. எனவே நம்முடைய கப்பல்களை பத்திரமாக மீட்டு கொண்டுவர, இந்தியா தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருக்கிறது.
ஆபரேஷன் சங்கல்ப்
மொத்தம் 6க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை இந்தியா அனுப்பியிருக்கிறது. இந்த கப்பல்கள் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலை நிறுத்தப்படும். இந்திய கப்பல்களை பாதுகாக்க கடந்த 2019ம் ஆண்டு 'ஆபரேஷன் சங்கல்ப்' எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்தான் தற்போது, இந்தியா தனது போர்க்கப்பல்களை அனுப்பியிருக்கிறது.
இந்திய போர் கப்பல்கள்
இப்படி அனுப்பப்பட்ட கப்பல்கள், சரியாக ஹர்முஸ் நீரிணைக்கு கிழக்கு பகுதி வரை செல்லும். ஆனால், நீரிணைக்குள் நுழையாது. அங்கிருந்து வெளியே வந்து, ஓமன் வளைகுடாவில் நுழையும் சரக்கு கப்பல்களுக்கு மட்டும்தான் பாதுகாப்பு வழங்கும். அங்கிருந்து பாதுகாப்பாக, அரபிக்கடல் வரை சரக்கு கப்பல்களை அழைத்து வரும்.
இந்திய கப்பல்கள்
மொத்தம் 22 இந்திய கப்பல்கள், பாரசீக வளைகுடாவில் சிக்கியிருக்கின்றன. இவை அனைத்தும், ஹார்முஸ் நீரிணையை தாண்டிதான் வெளியே வரவேண்டும். இந்த கப்பல்களில், அவற்றில் 1.67 மில்லியன் டன் கச்சா எண்ணெய், 3.2 லட்சம் டன் எல்பிஜி மற்றும் 2 லட்சம் டன் எல்என்ஜி (LNG) இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமும் வர்த்தக போக்குவரத்து
இந்த அளவு கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு வெறும் இரண்டரை நாட்கள்தான் போதுமானது. அதேபோல, எல்பிஜி 4 நாட்களுக்கும், எல்என்ஜி இரண்டரை நாட்களுக்கு மட்டுமே போதுமானவை. எனவே இந்த பாதையில் இந்திய கப்பல்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும். தினமும் இந்த வர்த்தக போக்குவரத்து தொடர வேண்டும்.
ஏற்கெனவே இந்திய கடற்படையின் பாதுகாப்பில் Shivalik மற்றும் Nanda Devi ஆகிய இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா வந்தடைந்தன. இந்நிலையில் மற்ற கப்பல்களையும் பத்திரமாக மீட்க, ஈரானுடன் இந்தியா தூதரக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications