அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்- பாதுகாப்பு அமைச்சகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாஜக அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையான அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் சேருவதற்கு சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஆயுதப்படைகளில் இந்திய இளைஞர்களை பணியமர்த்தும் புதிய திட்டத்துக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அக்னிபாத் அல்லது அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அக்னிபத் அனுமதிக்கும்.

Indian Navy Receives 3,03,328 Applications Under Agnipath Scheme

ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்துவதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.

அக்னி வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

Indian Navy Receives 3,03,328 Applications Under Agnipath Scheme

ஆனால் அக்னிபாத் திட்டமானது ராணுவத்தில் சேர காத்திருந்த தங்களது எதிர்காலத்தையே நாசமாக்கிவிட்டது என கூறி நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். வட இந்திய மாநிலங்கள்தான் பற்றி எரிந்தன. வட இந்திய மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வட இந்தியாவில் பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்தும் செய்யப்பட்டன. ஆனாலும் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் சேருவதற்கான விண்ணப்பங்களையும் பெற்றது.

இதனடிப்படையில் நாட்டின் கடற்படையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவதற்கு மொத்தம் 3,03,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் கடற்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலில் இத்திட்டத்தில் சேர அதிகபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது. போராட்டங்களைத் தொடர்ந்து இது 23 ஆக உயர்த்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+