Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் திருப்பம்.. இந்தியா மெகா ப்ளான்..ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பேரல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : ரஷ்யாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனத்திடமிருந்து சலுகை விலையில் சுமார் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அடுத்தடுத்த நாட்களில் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்டமேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்த பொருளாதார தடை விதிப்பு காரணமாக இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ரஷ்யா சலுகை விலையில் எண்ணெய் இறக்குமதியை வழங்கத் தொடங்கியுள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் அளவுக்கு இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படும் நிலையில் ரஷ்யாவில் இருந்து சுமார் 1.3 சதவீதம் இறக்குமதியாகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் சுமார் 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இந்தியன் ஆயில் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு பீப்பாய்க்கு 20 முதல் 25 அமெரிக்க டாலர் என்ற சலுகை விலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

எண்ணெய் இறக்குமதி

எண்ணெய் இறக்குமதி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா மீது அமெரிக்காவின் எண்ணெய் இறக்குமதி தடை உள்ளிட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை. இந்தியாவின் முறையான எரிசக்தி பரிவர்த்தனைகள் அரசியலாக்கப்படக் கூடாது, எண்ணெய் வளத்தில் தன்னிறைவு பெற்ற நாடுகளோ அல்லது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளோ கட்டுப்பாட்டு வர்த்தகத்தை நம்பகத்தன்மையுடன் ஆதரிக்க முடியாது என்று இந்திய அரசுவட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

பொருளாதார தடை மீறல்?

பொருளாதார தடை மீறல்?

ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது பொருளாதாரத் தடைகளை மீறுவதாக இருக்காது எனவும், அதே நேரத்தில் அது உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிப்பதாக இருக்கும் என அமெரிக்கா கூறியிருந்தது. தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்க்கான ரஷ்யாவின் சலுகையை இந்தியா ஏற்கும் சாத்தியக்கூறு குறித்து கேட்டதற்கு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வாரத்தின் இது தடைகளை மீறும் என்று நான் நினைக்கவில்லை என்று கூறினார். ஆனால் வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும் போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ரஷ்ய தலைமைக்கு ஆதரவு என்பது வெளிப்படையாக ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு படையெடுப்பிற்கான ஆதரவாகும் சாகி தெரிவித்திருந்தார்.

இறுதியாக வாய்ப்பு

இறுதியாக வாய்ப்பு

இன்றைய கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, ரஷ்ய எண்ணெய் நிறுவனத்துடனான கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தம், சர்வதேச சந்தையில் தற்போது இந்தியாவுக்குக் சிறந்த ஆஃபர் எனவும், ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் அதிக போக்குவரத்துச் செலவு காரணமாக குறைவாகவே இருந்தபோதிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடியின் காரணமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை ரஷ்ய நிறுவனங்களுடன் இறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+