செக் குடியரசு நாடு போட்ட தடை... வேலையில் சேரமுடியாமல் தவிக்கும் இந்தியர்கள்.. உருக்கமான கோரிக்கை
டெல்லி : சுமார் 200 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், முதல்முறையாக வேலைக்கு சென்றவர்கள் , ஆராய்ச்சி அறிஞர்கள் உள்பட செக் குடியரசு விசாக்கள் வைத்துள்ள ஏரளாமானோர் , இந்தியாவிற்கு எதிராக கோவிட் -19 பயணக் கட்டுப்பாடு காரணமாக தவிக்கிறார்கள் . ஏனெனில் செக் குடியரசு ஆகஸ்ட் 2 க்குப் பிறகு விசா வாங்கியவர்களை மட்டுமே அனுமதித்துள்ளது, மற்றவர்கள் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
செக் தூதரக அதிகாரிகள் இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பதிலில், "செக் குடியரசின் சுகாதார அமைச்சகத்தின் பாதுகாப்பு நடவடிக்கையால் செக் குடியரசிற்குள் நுழைவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன
.இதன்படியே இந்தியாவிலிருந்து வரும் பல வகை பயணிகள் செக் குடியரசிற்குள் நுழையலாம். ஆனால் செக் நாட்டு அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட நீண்ட கால அல்லது நிரந்தர அல்லது தற்காலிக குடியிருப்பு அனுமதி மற்றும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அல்லது அரசு பிரதிநிதிகள் ஆகியோர் ஆகஸ்ட் 2, பிறகு வழங்கப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் தான் வர முடியும் என்று கூறினார்கள்.

செக் பல்கலை
இதன்படி செக் தூதரகம் 2021-2022 கல்வியாண்டில் செக் பல்கலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுத் திட்டங்களில் படிப்பதற்காக நீண்ட கால விசாக்கள் பெற்றுள்ள விசா விண்ணப்பங்களை ஏற்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.

முடியவில்லை
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷிரிஸ்டி வர்மா, 25, ஹைதராபாத்தில் தனது வேலையை ஏப்ரல் மாதத்தில் விட்டுவிட்டார், ஜூன் மாத இறுதியில் செக் சார்ந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும்படி அழைத்துள்ளார்கள் . அவரது குடும்பத்தில் ஒரே சம்பாத்தியக்காரராக வர்மா இருக்கிறார், இப்போது வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

மன உளைச்சல்
இதனிடையே செக் குடியரசு நாட்டில் வேலை செய்யும் இந்திய தொழில் வல்லுநர்கள் #openczembind என்ற சமூக ஊடக பிரசாரத்தைத் தொடங்கி, change.org இல் ஒரு ஆன்லைன் மனுக்காக கையெழுத்திட்டனர், இதற்காக அவர்கள் ஆகஸ்ட் 8 வரை 600 க்கும் மேற்பட்ட கையொப்பங்களைப் பெற்றுள்ளனர். இது தொடர்பாக செக்குடியரசு நாட்டில் பணியாற்றும் ஊழியர்கள் கூறும் போது, "இந்தியாவில் கொரோனா அதிகரித்த காரணத்தால் செக் தூதரகம் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை அதன் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது. பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் (உதாரணமாக, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, குரோஷியா, கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றியம்) ஏற்கனவே அத்தியாவசிய பயணத்தை அனுமதித்துள்ளன. ஆனால் இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பயணங்கள் (ஆராய்ச்சியாளர்கள், வேலை ஊழியர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்களின் குடும்ப ஒன்றிணைப்பு ) செக்குடியரசில் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் நாங்கள் அனைவரும் வேலை ஒப்பந்தங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலைகளுக்கான ஒப்பந்தங்களை நான்கு/ஐந்து மாதங்களுக்கு மேல் கையில் வைத்துக் கொண்டு முடிக்க முடியாமல் தவிக்கிறோம். (இந்த கட்டத்தில் எங்கள் தொழில் ஆபத்தில் உள்ளது). இந்த நிச்சயமற்ற தன்மை மற்றும் தாமதம் பலருக்கும் மன வலியையும் உளவியல் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது" என்று வேதனை தெரிவிக்கிறார்கள்

உஷாரான அதிகாரிகள்
செக் குடியரசு நாட்டில் பொதுத் தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. அங்குள்ள டெல்டா மாறுபாடு வைரஸ் தான் அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பேசு பொருளாக மாறியுள்ளது. 1 கோடி மக்கள்தொகை கொண்ட செக் குடியரசு நாடு, அக்டோபர் 2020 முதல் மே 2021 வரை 15,000 தினசரி கோவிட் -19 கேஸ்கள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட மொத்த இறப்புகளுடன் மிக மோசமான நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் தான் தற்போதைய சூழ்நிலையில் செக் குடியரசு நாட்டு அதிகாரிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்று செக் குடியரசு நாட்டில் வாழும் இந்தியர்கள் கூறினார்கள்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications