ரயிலில் இனி ஜன்னல் சீட்டிற்கு சண்டை இருக்காது! விரும்பிய சீட்டை நாமே தேர்வு செய்யலாம்! மேஜர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ரயில் பயணங்களை மேம்படுத்த ரயில்வே வாரியம் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது விமானங்களைப் போலவே ரயில்களிலும் பிடித்த சீட் தேர்வு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. இதுபோல பல்வேறு புதிய அம்சங்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

நாடு முழுக்க தினசரி பல லட்சம் பயணிகள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து முறையாக ரயில்வே இருக்கிறது. ரயிலில் சில குறைகள் இருப்பதாகப் பயணிகள் சுட்டிக்காட்டுவதை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்திய ரயில்வே தன்னுடைய பயணிகள் முன்பதிவு முறையை (Passenger Reservation System - PRS) மேம்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..

Indian Railways Introduces Seat Selection for Train Travel like Airline Booking System

சீட் தேர்வு செய்யலாம்

குறிப்பாக சீட் தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வர இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது விமானங்கள், ரிசர்வ் பேருந்துகளில் நாம் எப்படி சீட்களை தேர்வு செய்கிறோமோ அதுபோல ரயில்களிலும் சீட்களை தேர்வு செய்யும் முறையை இந்தியன் ரயில்வே கொண்டுவர இருக்கிறது. இந்த புதிய வசதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய முன்பதிவு முறையில் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன், கட்டண விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம், பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தைச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் போன்றோருக்கான வசதிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன" என்றார்.

8 மணி நேரம் முன்பு

ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் ரயில் டிக்கெட் புக்கிங் சீர்திருத்தங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். டிக்கெட் முன்பதிவு முறையை மேலும் ஸ்மார்ட் ஆகவும் வெளிப்படையாகவும் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் மாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முன்பதிவு சார்ட்டுகள் தயாரிப்பதிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. தற்போது, ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு சார்ட் தயார் செய்யப்படுகிறது.

இருப்பினும், 4 மணி நேரத்திற்கு முன்பு என இருப்பதால் கடைசி நிமிடத்தில் டிக்கெட் உறுதியாகாமல் பயணிகள் அவதியை எதிர்கொள்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே சார்ட் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்ன!

இது குறித்து அதிகாரி மேலும் கூறுகையில், "ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (Centre for Railway Information Systems - CRIS) மேம்படுத்தப்பட்ட நவீனப் பயணிகள் முன்பதிவு முறையை (Modern Passenger Reservation System - PRS) உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

புதிய PRS அமைப்பானது, நிமிடத்திற்கு 1.5 லட்சம் முன்பதிவுகளைக் கையாளும் திறன் கொண்டது. இது தற்போதுள்ள திறனை விட ஐந்து மடங்கு அதிகம். மேலும், டிக்கெட் குறித்து அறிந்து கொள்ளும் திறன் இப்போது நிமிடத்திற்கு 4 லட்சமாக இருக்கும் நிலையில், அதுவும் 40 லட்சமாக அதிகரிக்கும். இந்த அமைப்பு பல மொழிகளில் இருக்கும். மேலும் பயன்படுத்த எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்கல் புக்கிங் ஆதார்

இது ஒரு பக்கம் இருக்க தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் ஒரே நேரத்தில் அதிக டிக்கெட்களை புக் செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தட்கல் புக்கிங்கில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஜூலை 1 முதல் ஆதார் மூலம் வெரிஃபை செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+