கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நினைவிருக்கா? 10 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு கவாச் கருவி! விரைவில் டெண்டர்
டெல்லி: 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கவாச் கருவி அமைக்க இந்திய ரயில்வே முடிவு செய்து அதற்கான டெண்டரை விரைவில் கோர உள்ளது. மனித தவறுகளால் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாவதை இந்த கருவிகள் தடுக்கும்.
அண்மைக்காலமாக ரயில் விபத்துகள் அதிகரித்து வருகினஅறன. அந்த வகையில் ஒடிசாவில் கோரமண்டல் ரயில் வந்து கொண்டிருந்த போது அதே டிராக்கில் மற்றொரு ரயிலும் வந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். ஒரு ரயில் குறிப்பிட்ட டிராக்கில் வருவதை மற்றொரு ரயிலுக்கு தெரிவிக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்பட்டது.

இதே கவாச் எனும் தானியங்கி பாதுகாப்பு கருவி இருந்திருந்தால் இது போல் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்! இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்கள் உள்ளன.
இதில் 1000 முதல் 2000 கி.மீ. தூரத்திற்குத்தான் கவாச் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தூரத்திற்கும் கவாச் கருவியை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயில் 1465 கி.மீ. வழித்தடத்தில், 139 என்ஜின்களில் கவாச் கருவி பொருத்துவதற்கான டெண்டர் இதுவரை விடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
தற்போது டெல்லி- மும்பை (அகமதாபாத்- வதோதரா), டெல்லி மற்றும் ஹவுரா (லக்னோ- கான்பூர்) ஆகிய வழித்தடங்களில் கிழக்கு ரயில், கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே , வடக்கு ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில் ஆகியவை உள்ளடக்கிய 3000 கி.மீ. தூரத்திற்கு கவாச் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் கூறியிருப்பதாவது: அடுத்த 10 ஆயிரம் கி.மீ.ருக்கு கவாச் கருவியை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலுக்கு ஏற்றாற் போல் இந்த கவாச் கருவி செயல்படும். உதாரணமாக 5000 டன் எடை கொண்ட சரக்கு ரயிலை 1 முதல் 1.5 கி.மீ. தூரத்திலேயே நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
ஆனால் எம்இஎம்யூ ரயில்களை 300- 500 கி.மீ. தூரத்திலேயே நிறுத்த வேண்டும். தற்போது எச்பிஎல் பவர் சிஸ்டம்ஸ், கெர்நெக்ஸ் மற்றும் மேதா ஆகிய 3 நிறுவனங்கள் கவாச்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கவாச்சை மேலும் பல இடங்களில் அமல்படுத்த மேலும் புதிய நிறுவனங்களுக்கும் வருங்காலத்தில் டெண்டர் விடப்படும்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள 70 ஆயிரம் கி.மீ. ரயில் தண்டவாளத்திலும் கவாச் கருவியை பொருத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கவாச் கருவி என்பது ரயில்களில் பாதுகாப்பு அம்சத்தை மேற்கொள்ள இந்திய ரயில்வேயால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பாதுகாப்பு கருவியாகும்.
இந்த தானியங்கி கருவி இந்திய ரயில்களில் ஏற்படும் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து அதை தடுக்கும் திறன் கொண்டது. ரயில் பைலட்டின் கட்டுப்பாட்டை மீறி ரயில் இயங்கும் போது விபத்துகளை தடுக்கவும் ரயில் மோதல்கள் ஏற்படுவதை தடுக்கவும் தானாக பிரேக்குகளை பயன்படுத்தும் சிறப்பு அம்சம் உள்ளது.
அது போல் மூடுபனிக் காலங்களில் பார்வை குறைபாடு, அதிவேகம் உள்ளிட்ட நேரங்களிலும் கவாச் கருவி பயனை கொடுக்கும். இந்த கவாச் கருவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications