Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைவிடும் மோடி? ரஷ்யாவுக்கு விழும் அடி.. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் இந்தியா.. போச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்'' என்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய பிறகு டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் இதனை பிரதமர் மோடி உள்பட மத்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினார். இருவரும் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ‛‛இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவுக்கான பரஸ்பர வரியில் 18 சதவீதத்தை குறைத்துள்ளோம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை விட்டுவிட்டு அமெரிக்கா அல்லது வெனிசுலாவிடம் இருந்து வாங்க உறுதியளிக்கப்பட்டுள்ளது'' என்று ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டார்.

india russia donald trump

வார்த்தை விடாத மோடி

ரஷ்யாவும், நம் நாடும் நெருங்கிய நட்பு நாடுகள். பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் டிரம்ப் சொன்னது போல் இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்கா, வெனிசுலா பக்கம் சாயுமா? என்ற கேள்வி இயல்பாக அனைவருக்கும் எழுந்தது.

இதனை வெளிப்படுத்தும் வகையில் டொனால்ட் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது பற்றி மட்டுமே குறிப்பிட்டு நாட்டு மக்கள் சார்பில் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். கச்சா எண்ணெய் விவகாரம் பற்றி பிரதமர் மோடி எதுவும் சொல்லவில்லை.

ரஷ்யாவுக்கு சிக்கல்

அதேபோல் தான் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் அறிவித்தாலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த நம் நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இதுவரை எந்த அறிவுரைகளையும் வழங்கவில்லை. இது ரஷ்யாவுக்கு சாதகமாக பார்க்கப்படும். இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.

ஆனால் இன்னொரு விஷயம் தான் ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சமீபகாலமாக ரஷ்யாவிடம் இருந்து நம்நாடு வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

4 நிறுவனங்கள்

நம் நாட்டை எடுத்து கொண்டால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், நாயரா,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை வாங்கியது. இது உச்சபட்ச அளவாகும்.

1 லட்சம் பேரல்களுக்கு கீழ்

அதன்பிறகு தினமும் 1,50,000 பேரல் கச்சா எண்ணெயை வாங்கியது. ஆனால் தற்போது ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது 1 லட்சம் பேரல்களுக்கு கீழாக குறைந்துள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 500,000-600,000 பேரல்களுக்குக் கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போதைய பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான கச்சா எண்ணெய்க்கான போக்குவரத்து கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் அதனை நிறுத்த முடியாது. அதன்பிறகு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக மத்திய அரசின் அறிவுரைகள் பின்பற்றப்படும் என 2 நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான கொள்முதல்களுக்கு பிறகு புதிய ஆர்டர்களை அந்த நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.

சாய்ஸில் உள்ள நாடுகள்

இதற்கு மாற்றாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அதிகம் வாங்குவது பற்றி யோசித்து வருகின்றன. இந்நிலையில்தான் டிரம்ப் சொன்னபடி ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறைத்து வெனிசுலாவுடன் பிசினஸில் இறங்க உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் நம் நாட்டை பொறுத்தவரை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. ரிலையன்ஸ் மற்றும் நாயரா மட்டுமே அடர்த்தியான கச்சா எண்ணெயை சுத்திரிக்கும் திறன் கொண்டது. மற்ற நிறுவனங்களிடம் இந்த வசதி இல்லை. இது ரஷ்யாவை கைவிட்டு வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்போது பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+