Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பச்சை தமிழன்".. உக்ரைனிலும் "ஹிந்தியா", எங்களை பார்த்தால் மனுஷனா தெரியலயா.. கொந்தளித்த தமிழ் மாணவர்

தமிழக மாணவர்களை பிரித்து நடத்தப்படுவதாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை, மத்திய அரசு அதிகாரிகள் பாகுபாடுடன் நடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. எங்களை எல்லாம் பார்த்தால் மனுஷனா தெரியலயா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, தமிழக மாணவர்கள் ஆவேசத்துடன் கேள்வி கேட்கும் வீடியோக்கள் வெளியாகியும் வருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய தினமே, இந்திய மாணவர்கள் அங்கு சிக்கி கொண்டனர்.. இவர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வரும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியறி வருகிறார்கள்.. அதேசமயம், எந்த மாணவரும் பணயக் கைதியாக அங்கு இருப்பதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது..

 தமிழக மாணவர்கள்

தமிழக மாணவர்கள்

எனினும், உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் 75 ஆயிரம் பேரில், சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்.. உக்ரைன் முழுவதும் இந்திய மாணவர்கள் படித்தாலும், கார்கிவ் நகரில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள்தான் அதிகம் என்கிறார்கள்.. இப்போது இவர்கள் அனைவரும் உக்ரைனிலுள்ள இந்தியத் தூதரகம் தங்களைக் கைவிட்டதாகவே உணர்கிறார்கள்... ஃபேஸ்புக், ட்விட்டர் வழியாக மட்டுமே இந்தியத் தூதரகத்தின் செய்திகளை தெரிந்து கொண்டு வருகிறார்கள்..

அதிகாரிகள்

அதிகாரிகள்

எனினும், ருமேனியா எல்லையில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மாணவர்கள் அனுப்பும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் உக்ரைன் காவல் படையினரால் தாக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.. அதில், "நாங்களும் இந்தியர்கள்தானே... எங்களை ஏன் கைவிட்டீர்கள்?" என்று மாணவர்கள் கதறி அழுவது காண்போரின் இதயத்தை உலுக்கி எடுப்பதாக உள்ளது..

 கதறி அழும் மாணவர்கள்

கதறி அழும் மாணவர்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது.. இந்தியர்களை, இந்தியர்களாக பார்க்காமல், வடமாநிலம், தென்மாநிலம் என பிரித்து மத்திய அரசு அதிகாரிகள் நடத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் உக்ரைனில் கொந்தளித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. ஒருசில அமைப்பினர், வடமாநில மாணவர்களை மட்டும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.. அந்த மாணவர்கள், குறிப்பிட்ட "இந்து அமைப்பின்" கோயில் முத்திரை பதித்த பிரத்யேகமான டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்..

அதிகாரிகள்

அதிகாரிகள்

அவர்களை சுட்டிக்காட்டி, தமிழக மாணவர் ஒருவர் கொந்தளித்து பேசுகிறார்.. சம்பந்தப்பட்ட அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.. "எங்களை எல்லாம் பார்த்தால் மனுஷங்களா தெரியலையா.. ஏன் இப்படி பிரிவினை? நீங்கள் அனைத்து இந்திய மாணவர்களையும் ஒரேமாதிரிதானே நடத்த வேண்டும்? இதோ இந்த டி-ஷர்ட்டில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரை என்ன? எங்களுக்கு இப்பவே தெரிந்தாக வேண்டும் யார் இவர்கள்? எதற்காக இவர்களை மட்டும் பாதுகாப்பாக மீட்டு அழைத்து செல்கிறீர்கள்?" என்று கொந்தளிக்கிறார்.

தூதரகம்

தூதரகம்

அதுமட்டுமல்ல, இந்திய தூதரகத்துல இருக்கும் அதிகாரிகளிடம் நம் தமிழக மாணவர்கள் உதவிகளை கேட்டாலும் செய்வதில்லையாம்.. ஆங்கிலத்தில் உதவிகளை கேட்டால், அவர்கள் இந்தியிலதான் பேசுறாங்களாம்.. ஆங்கிலத்துல பேச மறுக்கிறார்கள் என்றும் உக்ரைன்ல சிக்கியிருக்கிற தமிழக மாணவர் ஆவேசத்துடன் சொல்கிறார்.. இந்த மீட்பு விஷயத்திலும் தமிழக மாணவர்களை அவமானப்படுத்தி, புறக்கணிக்கப்படுவதும், தென்மாநிலம், வடமாநிலம் என்ற பிரிவினையை அதிகாரிகள் கையில் எடுத்திருப்பதும் பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 வெறும் பில்டப்

வெறும் பில்டப்

ஆனால், நேற்றைய தினம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 40 வருடங்கள் பல்வேறு நாடுகளில் வெளியுறவுப் பணி செய்தவர். இங்கே இருக்கும் முதல்வர் ஸ்டாலின் போன்று வாட்ஸ்அப் கால் பேசி பில்டப் செய்வது அவரது வேலை கிடையாது.. மாணவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் மாநில அரசின் கடமை.ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக எம்பி.,எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது...

Recommended Video

    S 400 missile system | US என்ன தடை போட்டாலும்! India-வுடன் நிற்கும் Russia | Oneindia Tamil
     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    இவர்களால் அங்கு சென்று ஒன்றுமே செய்ய முடியாது... இதில் முதல்வர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. மாணவர்களை மீட்பதில் அரசியல் செய்யக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.. ஆனால், மாணவர்களின் இந்த கதறல் வீடியோக்களை பார்த்தால், மத்திய அரசு அவர்களின் கடமையை ஒழுங்காக செய்திருந்தால், தமிழ்நாடு அரசு இதுல தலையிட வேண்டிய தேவையே இருந்திருக்காது என்பதைதான் நாம் சொல்ல வேண்டி உள்ளது...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+